Home சினிமா Vettaiyan: வேட்டையன் படத்தில் ராணா கேரக்டர் இதுதானா..? தலைவருடன் செம கெத்து காட்டும் பல்வாள் தேவன்!...

Vettaiyan: வேட்டையன் படத்தில் ராணா கேரக்டர் இதுதானா..? தலைவருடன் செம கெத்து காட்டும் பல்வாள் தேவன்! – Kumudam

0


சென்னை: தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா அளவில் ரிலீஸாகும் வேட்டையன் படத்திற்கு, படக்குழு தாறுமாறாக ப்ரோமோஷன் செய்து வருகிறது. முக்கியமாக வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான ‘மனசிலாயோ’ பாடல், ரசிகர்களுக்கு செம வைப் கொடுத்து வருகிறது. இப்பாடலுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ரீல்ஸ் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

அதேபோல், வேட்டையன் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் 20ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதனிடையே வேட்டையன் படத்தில் நடித்துள்ள நடிகர்கள், நடிகைகளின் கேரக்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. முதலில் ரித்திகா சிங், அடுத்து துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் ஆகியோரின் கேரக்டர்களை படக்குழு அறிவித்தது. இந்த வரிசையில் தற்போது தெலுங்கு நடிகர் ராணாவின் கேரக்டர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. 

இந்த அப்டேட்படி, வேட்டையன் படத்தில் நட்ராஜ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் ராணா. முன்னதாக வேட்டையனில் ராணா தான் வில்லனாக நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில், ரஜினியும் ராணாவும் ஒன்றாக நடித்துள்ளனர். அதாவது இருவருக்கும் இடையேயான காட்சிகளில் வில்லத்தனம் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது. இதனால் வேட்டையன் படத்தில் ராணா தான் வில்லனா அல்லது ஃபஹத் பாசிலா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 
 
ராணாவை தொடர்ந்து ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோரது கேரக்டரும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. வேட்டையன் படத்தில் ரஜினி ரிட்டையர்ட் போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில், மரண தண்டனைக்கு எதிராக போராடும் ரிட்டையர்ட் போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் ரஜினி நடித்துள்ளாராம்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version