Home அரசியல் 6 தொகுதி இடைத்தேர்தல்: பெருந்துறையில் களமிறங்கும் அண்ணாமலை – Kumudam

6 தொகுதி இடைத்தேர்தல்: பெருந்துறையில் களமிறங்கும் அண்ணாமலை – Kumudam

0



சட்டசபை தேர்தலுக்கு பின், பா.ஜ.,வில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். அதில், 18 லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.ஜூலை 1-ம் தேதி முதல் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். 

இந்நிலையில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, தாராபுரம், விராலிமலை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு, விரைவில் இடைத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போட்டியிட, அக்கட்சியினர் வலியுறுத்துகின்றனர். அம்பாசமுத்திரம் தொகுதியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட இருக்கிறார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு, பலத்தை காட்டலாமா என்பது குறித்து, ஆதரவாளர்கள் அண்ணாமலைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். வெற்றி தோல்வியை தாண்டி சுமார் 50 லட்சம் வாக்குகளை பெற முடியும் என அண்ணாமலையிடம் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். 

ஆதரவாளர்களின் வலியுறுத்தலை தொடர்ந்து, பெருந்துறை தொகுதியில் சாதக, பாதகங்களை ஆராய அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். தொகுதி தொடர்பாக சர்வே எடுக்கவும் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார். அது மட்டுமின்றி பெருந்துறை தொகுதியில் பூத் கமிட்டி அமைக்கவும் ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.  இந்த அறிக்கைகள் கிடைத்த பிறகே இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அண்ணாமலை இறுதி முடிவு எடுப்பார் என தெரிகிறது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version