Home அரசியல் தவெக ரீல்ஸ் ஆட்சிக்கு மக்களே பாடம் புகட்டுவார்கள்: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்  – Kumudam

தவெக ரீல்ஸ் ஆட்சிக்கு மக்களே பாடம் புகட்டுவார்கள்: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்  – Kumudam

0



தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், 3 ஆண்டுகளுக்கு முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்சையை ஏற்படுத்திய நிலையில், திமுக மாணவரணி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. 

ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை., தடையை மீறி சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவரணியினர் போலீசார் கைது செய்யப்பட்டனர். இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்த கைது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்: ”போதைப் பொருள் பயன்படுத்தியது போல், ”தக் லைஃப் ஸ்டோரி (Thug Life Story) போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது! த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்கு! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!

இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது! அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்! “டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!” எனக் கூறியுள்ளார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version