back to top
25.3 C
London
Sunday, June 28, 2026
No menu items!
Homeஅரசியல்பைபிள் ஜோசப்பும் முதலமைச்சர் ஜோசப்பும் ஒன்றா? மரிய வில்சனை கண்டித்த கிறிஸ்தவ மக்கள்... - Kumudam

பைபிள் ஜோசப்பும் முதலமைச்சர் ஜோசப்பும் ஒன்றா? மரிய வில்சனை கண்டித்த கிறிஸ்தவ மக்கள்… – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



பைபிளின் பழைய ஏற்பாட்டில் ஒரு ஜோசப் இருக்கிறார். புதிய ஏற்பாட்டில் ஒரு ஜோசப் இருக்கிறார். அதுபோல் தமிழகத்திற்கு புதிதாக ஒரு ஜோசப் கிடைத்துள்ளார். அவர்தான் நமது முதல்வர் ஜோசப் விஜய்’ என நிதியமைச்சர் மரிய வில்சன் முழங்க, த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆரவாரம் செய்தார்கள். ஆனால், மரிய வில்சனின் எல்லை மீறிய புகழாரம் கிறிஸ்துவ மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது!

இதுகுறித்து தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் பெருமன்ற உறுப்பினர் ராஜேஷ் ரவிச்சந்தரிடம் பேசினோம். “எதிர்பாராத வெற்றி கிடைத்ததும் தவெகவினர் தலை கால் புரியாமல் ஆடுகிறார்கள். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களுடன் விஜய்யை ஒப்பிட்டுப் பேசி வந்தவர்கள், தற்போது கோடான கோடி கிறிஸ்தவர்களின் கடவுளான யோசேப்புடன் (ஜோசப்) ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு வந்துவிட்டனர்.

எப்பேர்ப்பட்ட ஒரு புனிதருடன், நடிகராக இருந்து முதலமைச்சரான ஜோசப் விஜய்யை ஒப்பிட்டு பேசலாமா? தன்னை கொல்லத் துணிந்த சகோதரர்களை மன்னித்தவர் ஜோசப் திருமணத்திற்கு முன்பு பரிசுத்த ஆவியால் கர்ப்பமான அன்னை மரியாளை ஏற்றுக்கொண்டவர் ஜோசப்
சர்ச்சையில் அடைய மாறாக மனைவி, பிள்ளைகளை பிரிந்து வாழ்பவர் விஜய் எனவே நிதியமைச்சர் ஒரு வரலாற்றுப் பிழையை நிகழ்த்திவிட்டார்.

கிறிஸ்தவர்கள் எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்வார்கள். ஆனால், இயேசுவோடு யாரையாவது ஒப்பிட்டுப் பேசினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உலகின் பெரும்பான்மையான கிறிஸ்துவர்கள் வழிபடும் ஆண்டவரான இயேசுவை முதலமைச்சருடன் ஒப்பிட்டு அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். அது சட்டமன்றக் குறிப்புகளில் இடம்பெறும் என்று அவருக்கு தெரியாதா? ஒட்டுமொத்த கிறிஸ்துவர்களின் மனங்களையும் ரணமாக்கிய மரியவில்சன் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்” என்றார் கோபத்துடன்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவனத் தலைவர் இனிகோ இருதயராஜ் “அரைகுறையாக பைபிளை படித்துவிட்டு நானும் கிறிஸ்தவன்தான் என்று சொல்கிறவர்கள் இப்படித்தான் அவதூறு பரப்புவார்கள். மனிதர்களுக்கும் புனிதர்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். தங்கள் தலைவர்களை புகழ வேண்டும் என்று நினைக்கிறவர்கள் கடவுளின் தலையில்தான் கை வைக்கிறார்கள். முன்பு ஒரு முறை அதிமுகவினர் தங்கள் தலைவரை அன்னை மாதாவின் உருவத்துடன் இணைத்து போஸ்டர் ஒட்டி மகிழ்ந்தனர். அதற்குரிய தண்டனையை அக்கட்சி இப்போது அனுபவிக்கிறது.

இளிகோ இருதயராஜ் பேராலயத்தில் விஜய் முட்டிப் போட்டு வணங்கியதை பார்த்து ஏமாந்து கிறிஸ்தவர்கள் வாக்களித்துவிட்டனர். அதற்கு தண்டனைதான் இந்த பேச்சு” என்றார் ஆதங்கத்துடன். நிதித்துறை அமைச்சர் மரிய ரவிச்சந்திரன் வில்சனை தொடர்புகொண்டபோது அவரின் உதவியாளர்கள் செல்போனை எடுத்து, அமைச்சர் அதிகாரிகளுடன் ஒரு மீட்டிங்கில் இருக்கிறார். பிறகு அழைக்கிறோம்” இல்லை. சிக்கிய என்றவர்கள், கடைசி வரை பேசவே மச்சர் பில்சனதனி மனித துதி எவருக்கும் நல்லதல்ல… குறிப்பாக, ஆட்சியில் இருக்கும் தலைவர்களுக்கு!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here