டொனால்டு ட்ரம்ப் ஜார்ஜியா -மெலோனி ஆகியோரின் வார்த்தைப் போர்தான் சர்வதேச ஹாட் அக்கப்போர். ‘மாநாட்டின்போது எடுக்க மெலோனி கெஞ் என்னுடன் சேர்ந்து போட்டோ சினார்’ என்று ட்ரம்ப் கொளுத்திப் போட, ‘யாரிடமும் கெஞ்சும் வழக்கம் என் நாட்டிற்கு கிடையாது, ட்ரம்ப் நாவை அடக்க வேண்டும்’ என்று மெலோனி சூடாக பதில் கொடுத்திருப்பது அமெரிக்க – இத்தாலி உறவில் கிழிசலை ஏற்படுத்தியிருக்கிறது!
அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் ஆகிய ஏழு நாடுகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து அதற்கு ‘ஜி7 நாடுகள்’ என்று பெயர் வைத்திருக்கின்றன. ஆண்டுக்கு ஒருமுறை இந்நாட்டு அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கூடி வர்த்தகம் பாதுகாப்பு சம்பந்தமாக விவாதிப்பார்கள். அப்படித்தான் கடந்த ஜூன் 15 முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்கள் ஜி7 -52வது மாநாடு பிரான்ஸில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர்கள் கெய்ர் ஸ்டார்மர், ஜார்ஜியா மெலோனி, மார்க் கார்னி, சானே தகாய்ச்சி, ஃபிரீட்ரிச் மெர்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். வந்து சேர்ந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவர் மேடை ஏறியதுமே தனது கட்டை விரலை காட்டி, பாஸ் என்றார். ‘ஐ யம் கி மெலோனி பிரேசில், எகிப்து, கென்யா, தென்கொரியா, கத்தார், உக்ரைன், யு.ஏ.இ. ஆகிய எட்டு நாட்டுத் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். ரஷ்ய – உக்ரைன் போர், ஹிஸ்புல்லா, ஹவுதிக்கள் தீவிரவாதம், ஹார்மூஸ் நீரிணை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. மாநாடு முடிந்த பின்னர் உலகத் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
அப்போதுதான் அந்த சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதுகுறித்து பாரீஸில் உள்ள சர்வதேச பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசினோம். “போட்டோ ஷூட்டுக்காக பிரதமர் மோடி வந்தார். அவரைப் பார்த்ததும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் ஓடோடி வந்தார். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கிக்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் மெலோனி வெளியிட, அது வைரலானது. பத்து கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இப்படிப்பட்ட பரஸ்பரம் மரியாதைக்குரிய சந்திப்புக்கு கரும்புள்ளியாக ட்ரம்ப்பின் செயல் அமைந்துவிட்டது’ என்றவர். அதுகுறித்து விளக்கினார்.
“இத்தாலியில் உள்ள பிரபல சேனலான எல்.ஏ.7ல் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றுக்கு தொலைபேசியில் ட்ரம்ப் பேட்டி அளித்தார். அப்போது, ‘இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு என்னுடன் தனிப்பட்ட முறையில் போட்டோ எடுக்க ஆசை. அதற்காக அவர் என்னிடம் கெஞ்சினார். ஆனால், எனக்கு அதில் விருப்பம் கிடையாது. இருந்தும் அவர் மீது பரிதாபப்பட்டு அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டேன். என்னிடம் பேசியதே அவருக்குப் பெருமையாக இருந்திருக்கும். என்னுடன் போட்டோ எடுத்து அவர் பிரபலமாக ஆசைப்படுகிறார்’ என்று சொல்ல. ஒட்டுமொத்த இத்தாலியும் கொதித்துப்போனது.
ரோமில் உள்ள அனைத்து ஊடகங்களும் மெலோனியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கின. மெலோனி இத்தாலிக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்’ என்று அந்நாட்டு மக்களே பேசத் தொடங்கினர். இதனால் கடும் டென்ஷனான மெலோனி, தனது எக்ஸ் தளத்தில் ட்ரம்பிற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், ட்ரம்பின் இந்தக் கூற்று என்னை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. உண்மையான நட்பு நாடுகளிடம் ஏன் அவர் இப்படி நடந்துகொள்கிறார் என்பது தெரியவில்லை.
எதிரி நாடுகளிடம் ட்ரம்ப் காட்டும் பணிவு இணக்கமான போக்கைக்கூட நட்பு நாடுகளிடம் ஏன் அவர் கடைபிடிப்பதில்லை. எது எப்படியோ, நானோ என் நாடோ யாரிடமும் கெஞ்சியது கிடையாது என்று காட்டமாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட ஒரே – ஐரோப்பிய தலைவர் ஜார்ஜியா மெலோனிதான். ஆனால், சிசிலியில் அமெரிக்க படைத்தளத்திற்கு அனுமதி மறுத்தது. ட்ரம்ப் போப் மோதலில் போப்புக்கு ஆதரவு நிலை எடுத்தது போன்ற நிகழ்வுகளால் மெலோனி மீது கோபத்தில் இருந்த ட்ரம்ப் இப்படியொரு சரவெடியை கொளுத்திப் போட்டு, அமெரிக்க இத்தாலி நட்புக்கே வேட்டு வைத்திருக்கிறார். ட்ரம்பின் இந்த பேச்சைக் கண்டித்து வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டோனியா டஜானி தனது அமெரிக்க பயணத்தையும், அமைச்சர் மார்க் ரூபியோவுடனான – சந்திப்பையும் ரத்து செய்திருக்கிறார். ஆனால், – ட்ரம்போ இதற்கெல்லாம் அசரவில்லை, தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் மீண்டும் இதே கருத்தைப் பதிவிட்டு இத்தாலியை மீண்டும் சீண்டியிருக்கிறார்” என்றார் விரிவாக.
–
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் பவன் – கெரா பிரதமர் மோடியை கடுமையாகக் கண்டித்திருக்கிறார். ‘பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்தபோது மூன்று மாலுமிகள் கொல்லப்பட்டது, அமெரிக்க இந்திய வர்த்தக – ஒப்பந்த அறிவிப்பு ஆபரேஷன் சிந்தூரை நான்தான் நிறுத்தினேன்’ என்று ட்ரெம்ப் மார்தட்டியது போன்ற முக்கியமான பிரச்னைகளை நேருக்கு நேர் எழுப்பாதது ஏன்? இனிமேலாவது மோடி தைரியமாக செயல்பட வேண்டும். அதற்கு அவர் மெலோனியிடமிருந்து நேருக்கு நேர் எப்படி பதிலடி கொடுப்பது என்று பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ட்ரம்பின் இந்த சர்ச்சை பேச்சு, ஜி7 மாநாட்டின் ஆக்கப்பூர்வமான தீர்மானங்களை பின்னுக்குத் தள்ளியிருப்பதுதான் கொடுமை!
