back to top
33.1 C
London
Wednesday, August 12, 2026
No menu items!
Homeசினிமா”மணிமேகலை அது பண்ணிருக்கலாம்....” – ஷகீலா ஓபன் டாக்! - Kumudam

”மணிமேகலை அது பண்ணிருக்கலாம்….” – ஷகீலா ஓபன் டாக்! – Kumudam

Date:

Related stories

என்னது சூரியனுக்கே வேர்த்திருச்சா?… சட்டசபையில் நடந்த ‘Science Comedy’!

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் வேளாண் அமைச்சர் வினோத் பேசும்போது,...

FAIR DELIMITATION: விஜய்யின் தனித்தீர்மானத்தில் இருக்குற  3 விஷயத்த கவனிச்சீங்களா?

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு...
spot_imgspot_img



குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் இனி அங்கமாக இருக்கப்போவதில்லை என்றும். தனக்கு தன்மானம், சுயமரியாதை தான் முக்கியம் எனவும் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவரான மணிமேகலை வீடியோ வெளியிட்டு இருந்தார். அதோடு, அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற தொகுப்பாளர் ஒருவரின் தலையீட்டால் தான் இப்படியான முடிவை எடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். 

மணிமேகலை இப்படி வீடியோ வெளியிட்டதும், அப்போட்டியில் பங்கேற்ற பிரபல தொகுப்பாளினி பிரியங்காவை பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக சாடி வந்தனர். பிரியங்கா ஒரு நார்சிஸ்ட் என்று பிரபல பின்னணி பாடகி சுசித்ரா தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், மணிமேகலைக்கு ஆதரவாக களமிறங்கி பிரியங்காவை தனிப்பட்ட முறையில் தாக்க ஆரம்பித்தனர் நெட்டிசன்கள். 

தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக இது தொடர்ந்துகொண்டே இருந்தது. இதனால் குக் வித் கோமாளி பிரபலங்கள் ஒவ்வொருவரும் செட்டில் என்ன நடந்தது என்று தெரியாமல் பிரியங்காவை குறை சொல்லாதீர்கள் என்று அடுத்தடுத்து களமிறங்கினர். போட்டியாளரான பூஜா, கோமாளிகளான குரேஷி, சுனிதா உட்பட பலரும் பிரியங்காவிற்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டதோடு, மணிமேகலைக்கு அட்வைஸ்களையும் வழங்கினர். 

இந்த நிலையில், குக் வித் கோமாளி மூலம் அம்மா என்ற அடையாளத்தை பெற்ற நடிகை ஷகீலா, பிரியங்காவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை ஷகீலா, தனக்கு மணிமேகலை, பிரியங்காவை நன்றாகவே தெரியும் என்பதோடு அவர்கள் இருவரும் ஒரேமாதிரி தான். அப்படி இருக்கும்போது கருத்து வேறுபாடு காரணமாக இப்படி ஒரு பிரச்னை வெடித்துள்ளது என்று கூறியுள்ளார். அதோடு, மணிமேகலை சகித்துக் போயிருக்கலாம்… அப்படி போயிருந்தால் இன்னும் சில சீசன்களுக்கு அவர் தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் உருவாகியிருக்கும் என்று ஷகீலா கூறியுள்ளார். 

தொகுப்பாளராக இருக்க வேண்டும் என்பதே மணிமேகலையின் ஆசை என்பதால், சகித்துக் கொண்டு தொகுத்து வழங்கி வாய்ப்புகளை பெற்றிருக்கலாம் என்று ஷகீலாவின் கருத்துக்கு பிரியங்காவிற்கு ஆதரவானவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here