back to top
24.2 C
London
Saturday, June 27, 2026
No menu items!
Homeதமிழ்நாடுகுமுதம் எக்ஸ்குளூசிவ் - ‘நிறைய படிச்சா பெரிய பணக்காரனாகலாம்னு அப்போ நினைச்சேன்!’ பாக்யராஜ் சிறப்பு பேட்டி...

குமுதம் எக்ஸ்குளூசிவ் – ‘நிறைய படிச்சா பெரிய பணக்காரனாகலாம்னு அப்போ நினைச்சேன்!’ பாக்யராஜ் சிறப்பு பேட்டி – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவுசெய்து, “ஒரு படம், ஒரு வெப் சீரிஸ் பண்றேன்…” என அடுத்த 50-&க்கு ரெடியாகி யிருக்கும் கே.பாக்யராஜுக்கு குமுதத்தின் பூங்கொத்து… கடந்த இதழில் ஆரம்பித்த பேட்டியின் தொடர்ச்சி…இப்படி தேடித்தேடி புத்தகம் படிக்கும் பழக்கம் எப்போ ஆரம்பிச்சது? ஸ்கூல் படிக்கும் காலத்திலேயா? என்றதும், பள்ளிக்-கூட காலத்துக்குச் சென்று, நம்மையும் அங்கே கூட்டிச் சென்றார், பாக்யராஜ்.

“நிறைய படிச்சா பெரிய பணக்-காரனாகலாம்னு ஸ்கூல் படிக்கிறப்ப பலர் சொல்லக் கேள்விப்பட்டேன். படிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் கொஞ்ச நாள்ல உண்மை என்னன்னு புரிஞ்சிடுச்சு. ஊருக்குள்ள இருக்கும் பணக்காரங் களைக் கவனிச்சப்ப… படிப்புக்கும் பணத்துக்கும் சம்பந்தம் இல்லைன்னு தெரிஞ்சது. அறிவுதான் பணத்தைவிட பெருசுன்னு தெரிஞ்சது. அப்புறம் அறிவுக்காகப் படிக்க ஆரம்பிச்சேன். அப்படியே பழகிடுச்சு…’’ என்றார்.

பள்ளிப்பாடங்களை மட்டுமின்றி வாழ்க்கைக்கான பாடத்தையும் சேர்த்தே கற்பித்த பள்ளி ஆசிரியர்கள் குறித்தும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.“என்னோட ஸ்கூல் டீச்சர்ஸ் எனக்குச் சரியான வழிகாட்டிகளா இருந்தாங்க. ‘பாக்யராஜ், எந்த ஒரு காரியத்தைச் செய்ய முயற்சிசெஞ்சாலும் கண்டிப்பா அதுல அம்பது பர்சென்ட் தோல்விக்கான வாய்ப்பு இருக்கும், தடங்கலும் இருக்கும். ஆனா, நீ முயற்சியே செய்யாட்டி, கன்ஃபார்மா அது தோல்விதான்! அதனால எதையும் தைரியமா முயற்சி செய்! 

தடங்கல் வந்தா இனி தொடரமுடியாதுன்னு அர்த்தமில்லை, வேற உபாயங்கள்ல முயற்சி செஞ்சா காரியம் கைகூடும். அதுக்கான அறிகுறிகள் தான் தடங்கல் எல்லாம்’ அப்படின்னு என்னைத் தட்டிக்கொடுத்தாங்க. அவங்க எனக்குக் கொடுத்த அனுபவமொழிகளும், சரியான வழிகாட்டுதலும்தான் ஏணிப்படிகளா இருந்து உயர்த்தின. உயரங்களில் உட்காரவைத்தன’’ என்றார்.

‘உங்கள் படங்கள் பெரும்பாலும் கணவன் &- மனைவி அன்னியோன்யத்தை ஆழமாக அணுகும் அகப்பார்வை கொண்டதாக இருந்தன. ஆனா, இப்ப வர்ற படங்கள் எல்லாமே உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், புறப்பார்வை கொண்டதாகவே இருக்கே…’ என்றதும், அழகான + ஆழமான பதில் கிடைத்தது பாக்யராஜிடம் இருந்து.

“ஒரு காலத்துல கமல் ஒரு இக்கட்டான நிர்ப்பந்தத்துல போய் சிக்கிக்கிட்டு இருந்தார். ஒரு படத்துல குள்ளமா நடிக்கிறது, அடுத்த படத்துல கருப்பா மேக்அப் போட்டுக்கறது… இப்படி படத்துக்குப் படம் எதையாவது வித்தியாசமா பண்ணிக்கணும்னு ஒரு கட்டாயத்-துல மாட்டிக்கொண்ட மாதிரி இருந்துச்சு. இப்ப இருக்கும் டைரக்டர்கள்ல பெரும்-பாலான-வங்க அப்படித்தான் பான் இண்டியான்னு ஒரு கான்செப்ட்டுக்-குள்ள போய் சிக்கிக்கிட்டாங்க.

 எல்லா ஸ்டேட்ல இருந்தும் ஒரு ஆக்டரை கூட்டிட்டு வந்து, அவங்க எல்லாருக்கும் பிரமாண்டமா ஸீன் வைக்கணும்னு யோசிக்கிறதால, கதைக்குத் தேவையில்லாத காட்சிகளெல்லாம் படத்தில் சேர்ந்துடுது. படம் முடிஞ்ச பின்னாடி திடுதிப்புன்னு அமீர்கான் வந்து நிற்கிறார். அடிதடி, துப்பாக்கி, வெடிகுண்டுன்னு புற விஷயங்கள்ல காட்டுற ஆர்வத்தை அக விஷயங்கள்ல காட்டுறதில்லை. அதனால, உணர்வுகள் மிஸ் ஆகுது. உணர்வுகளைச் சொல்ற மாதிரி கதைகளும் மிஸ் ஆகிடுது. பிரமாண்டமா சொல்றோம்னு கதைக்குத் தேவையில்லாத காட்சிகளை-யெல்லாம் வம்படியா திணிச்சுடுறாங்க’’ என்றார்.

இன்னொரு விஷயத்தையும் சொன்னார். அது, கதை &- திரைக்கதை -& வசனம் &- இயக்கம் என அத்தனை துறை-களிலும் தன் பெயரையே போட்டுக்-கொள்ள நினைக்கும் புதிய இயக்குநர்-களுக்கு சரியான வழிகாட்டுதலும்கூட! “கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன், நடிப்பு… எல்லாமே தனித் தனி ஆர்ட். எங்க டைரக்டர் (பாரதிராஜா) எத்தனையோ படமெடுத்திருந்தாலும் அதில் ரெண்டு படத்துக்குத்தான் அவரோட கதை. மத்ததெல்லாம் என்னைப் -போன்ற கதாசிரியர்-களோட கதைதான். அதனாலதான் நீங்க சொல்ற மாதிரி புதுசுபுதுசா கதைக்-களம் அமைஞ்சது. 

சேலஞ்சிங்கா ஸ்க்ரிப்ட் அமைஞ்சது. கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன், நடிப்புன்னு ஒரே ஆள் எல்லாத்தையும் பண்றதால சவாலுக்கு வாய்ப்பில்லாம போகுதுன்னு நினைக்கிறேன்’’ என்றவர், புன்சிரிப்புடன் தன்னையும் சுயவிமர்சனம் செய்து-கொண்டார். “நான்தான் என் சிஷ்யர்களைக் கெடுத்-துட்டேன்னு நினைக்கிறேன். என்னைப் பார்த்து என் சிஷ்யர்களும் அப்படியே எல்லா துறைகளையும் தானே செய்யணும்னு இறங்கிட்டாங்க.அவங்கவங்க தனித்தனி பாணியைப் பிடிச்சுக்–கிட்டாங்க, ஜெயிச்சும் காட்டிட்டாங்க. எல்லாத் துறை-களையும் இழுத்துப்போட்டுக்-கலைன்னா இன்னும் கூடுதலா சாதிச்சிருப்—-பாங்கன்னு தோணுது’’ என்றார். உங்கள் பாணியில் இப்போது படம் பண்ண யாராவது இருக்காங்களா? என்றோம். 

“ ‘லப்பர் பந்து’ படம் பார்த்தப்ப சந்தோஷப்-பட்டேன். அந்தப் பொண்னை (ஸ்வாசிகா) திரையில பார்த்தப்ப அப்படியே ‘முந்தானை முடிச்சு’ பரிமளாவைப் பார்க்குறது மாதிரியே இருந்துச்சு. டைரக்டர் தமிழரசன் பச்சமுத்துவைக் கூப்-பிட்டுப் பாராட்டினேன்’’ என்றார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here