Home சினிமா தனுஷ் படத்தில் இணைகிறார் அர்ஜுன் ரெட்டி நாயகி  – Kumudam

தனுஷ் படத்தில் இணைகிறார் அர்ஜுன் ரெட்டி நாயகி  – Kumudam

0


தனது அபாரமான நடிப்பாற்றலால் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வென்ற நடிகர் தனுஷ்,  இயக்குநராகவும் அவதாரம் எடுத்து 3 படங்களை இயக்கியுள்ளார். ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகிய பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராகிய தனுஷ் அடுத்ததாக தனது நடிப்பில் 50வது படமான ராயன் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதற்கடுத்ததாக குபேரா படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இதற்கு இடையே ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். 

தனுஷின் அக்கா மகனான பவிஷ் கதாநாயகனாக இத்திரைப்படத்தில் அறிமுகம் ஆகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ரம்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியானது. 

தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், அசோக் செல்வன் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் நாயகியான நித்யாமேனனுடன் தனுஷ் மீண்டும் இணைகிறார் என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளியாகின.

நித்யா மேனனைத் தொடர்ந்து ஷாலினி பாண்டேவும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பது தற்போது உறுதி ஆகியிருக்கிறது. அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இவர் தமிழில் 100% காதல், கொரில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவரது இணையத் தொடர்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version