back to top
26.6 C
London
Monday, August 10, 2026
No menu items!
Homeதமிழ்நாடுசென்னையில்  சிறுமியை வெட்ட முயற்சி- சகோதரி கணவர் கைது - Kumudam

சென்னையில்  சிறுமியை வெட்ட முயற்சி- சகோதரி கணவர் கைது – Kumudam

Date:

Related stories

“என்னுடைய ஸ்டைல் இதுதான்… கேலி பண்றீங்களா?” – நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்

தமிழக பட்ஜெட் உரையை பிழைகளுடன் உச்சரித்ததாக மதிமுக எம்எல்ஏ கார்த்திகேயன்...

“தினந்தினம் டென்ஷன்ல இருக்கோம்..”: புஸ்ஸி ஆனந்த் –  எம்ஆர்கே இடையே கலகல…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில்,...

விசில் புரட்சி செய்த கவுன்சிலர்… ஆக்‌ஷன் காட்டிய மேயர்!

திமுகவிலிருந்து விலகி தவெகவுக்கு சென்ற கவுன்சிலர் அல்லா பிச்சை ...

“1000 ஏக்கர், 1000 மாடு!” – முன்னாள், இந்நாள் அமைச்சர்களை மாட்டிவிட்ட எம்.ஆர்.கே..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வரும்...
spot_imgspot_img


சென்னையில் சிறுமியை கத்தியால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சி வெளியான சம்பவம் தொடர்பாக சகோதரி கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை அயனாவரம் கே.எச். சாலையில் நவ.19ம் தேதி மதியம் சிறுமியை  மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் அயனாவரம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் தாக்குதலுக்குள்ளான பெண் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி என்பது தெரியவந்தது.

போலீசார் தொடர் விசாரணையில் சிறுமியை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் கடந்த ஜூலை மாதம் வீட்டுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டதும், அப்போது சிறுமியின் தாய்  அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்ததற்காக போக்சோ சட்ட பிரிவில் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி சிறுமியின் பாட்டி சூளையில் உள்ள அவரது வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அதற்காக சிறுமியின் சகோதரரி கணவரான சந்தோஷ் என்ற தவக்களை (25) என்பவர் சிறுமியையும் அவரது, அப்பாவையும் இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அயனாவரம் கேஎச் சாலை வழியாக சென்றார்.செல்லும் வழியில் சிறுமியை திருமணம் செய்து கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்த மணிகண்டன் சாலையில் வருவதைப் பார்த்து கத்தியால் அவரை தாக்க சந்தோஷ் என்ற தவக்களை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனால், சிறுமி தனது அக்காவின் கணவரான சந்தோஷை தடுக்க முற்பட, சந்தோஷ் அவரை கத்தியை காட்டி மிரட்டியதும் வெட்ட முற்பட்டதும் அப்போது சிறுமியின் காது மற்றும் கைகளில் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.இதனையடுத்து அயனாவரம் போலீசார் சிறுமியை கத்தியால் தாக்கிய சந்தோஷ் (எ) தவக்களையை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ் (எ) தவக்களை மீது கீழ்ப்பாக்கம், புளியந்தோப்பு, ஓட்டேரி, வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட சந்தோஷ் (எ) தவக்களையிடம் அயனாவரம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here