back to top
26.1 C
London
Monday, August 10, 2026
No menu items!
Homeசினிமாகாதல் கணவரிடமிருந்து விவாகரத்து கோரினார் நடிகை ஊர்மிளா - Kumudam

காதல் கணவரிடமிருந்து விவாகரத்து கோரினார் நடிகை ஊர்மிளா – Kumudam

Date:

Related stories

“என்னுடைய ஸ்டைல் இதுதான்… கேலி பண்றீங்களா?” – நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்

தமிழக பட்ஜெட் உரையை பிழைகளுடன் உச்சரித்ததாக மதிமுக எம்எல்ஏ கார்த்திகேயன்...

“தினந்தினம் டென்ஷன்ல இருக்கோம்..”: புஸ்ஸி ஆனந்த் –  எம்ஆர்கே இடையே கலகல…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில்,...
spot_imgspot_img


பாலிவுட் நடிகையான ஊர்மிளா மடோண்ட்கர் தமிழில் இந்தியன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். 1990களில் இந்தித் திரைப்படங்களில் கொடிகட்டிப் பறந்த நாயகியாக இவர் இருந்தார். ரங்கீலா உள்ளிட்ட சில ப்ளாக் பஸ்டர் படங்கள் மூலம் தனது முத்திரையை ஆழமாகப் பதித்தார். இவர் காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபரும், மாடலுமான மொஹ்சின் அக்தர் மிர் என்பவரைக் காதலித்து வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாகவே இவர்கள் லிவிங் டுகெதர் உறவு முறையில் இருந்தனர். அதன் பிறகே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். 

ஊர்மிளாவை விட அவரது கணவர் மொஹ்சின் அக்தர் மிர் 10 வயது இளையவர். இருவருக்கும் இடையே 10 வயது வேறுபாடு இருந்த போதிலும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது இந்தியத் திரையுலகில் இது குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்படியாக மணமுடித்து இவர்கள் 8 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் தற்போத் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஊர்மிளா தனது கணவரைப் பிரியும் முடிவினை எடுத்துள்ளார். 

இதன் தொடர்ச்சியாக ஊர்மிளா தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் எனக்கோரி மும்பை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கணவன் – மனைவி இருவரும் ஒருமனதாக முடிவெடுத்து இந்த விவாகரத்து கோரும் மனுவை ஊர்மிளா தாக்கல் செய்யவில்லை. மொஹ்சினினின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. இருவரும் என்ன காரணத்திற்காக விவாகரத்து கோரினர் என்று தெரியவில்லை. திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு மண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்குள் சென்றிருக்கின்றனர். 

இந்த 8 ஆண்டுகளில் இருவருக்கும் குழந்தை கிடையாது. பிரபல நடிகையாக திகழ்ந்த ஊர்மிளா கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மும்பையில் போட்டியிட்டு பா.ஜ.க வேட்பாளரிடம் தோற்றுப்போனார். அதன் பிறகு அவர் சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார். சினிமா மற்றும் அரசியல் பிரமுகராக அறியப்படுகிற ஊர்மிளாவின் விவாகரத்தும் பரபரப்பான பேசுபொருளாகியிருக்கிறது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here