back to top
26.6 C
London
Monday, August 10, 2026
No menu items!
Homeசினிமாஇனி தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிடப்படுமா? – திரையரங்கு உரிமையாளர்கள் சொல்வது என்ன?...

இனி தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிடப்படுமா? – திரையரங்கு உரிமையாளர்கள் சொல்வது என்ன? – Kumudam

Date:

Related stories

“என்னுடைய ஸ்டைல் இதுதான்… கேலி பண்றீங்களா?” – நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்

தமிழக பட்ஜெட் உரையை பிழைகளுடன் உச்சரித்ததாக மதிமுக எம்எல்ஏ கார்த்திகேயன்...

“தினந்தினம் டென்ஷன்ல இருக்கோம்..”: புஸ்ஸி ஆனந்த் –  எம்ஆர்கே இடையே கலகல…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில்,...
spot_imgspot_img


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், “நம் பக்கத்து மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் இதுபோன்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சிதான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும். அப்படி அனுமதிப்பதால் அநேக வேலை வாய்ப்பு உருவாக்கும். 

திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதால் எந்த விதமான பாதிப்பு ஏற்படாது. அதேபோல ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் புதிய திரைப்படங்களை திரையிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். 

தொடர்ந்து பேசிய அவர், ”நரிக்குறவர்கள் உட்பட அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. யாருக்கும் எந்தவிதமான கட்டுப்பாட்டையும் நாங்கள் விதிக்கவில்லை. யூட்யுபில் எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்படுவதால் திரையரங்கிற்கு  வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது” திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீச்செல்வம் தெரிவித்தார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here