Home சினிமா கடைசி உலகப்போர் இடண்டாம் பாகம் வருமா ? – ஹிப் ஹாப் ஆதி – Kumudam

கடைசி உலகப்போர் இடண்டாம் பாகம் வருமா ? – ஹிப் ஹாப் ஆதி – Kumudam

0


ஹிப் ஹாப் மியூசிக் ஆல்பம் மூலம் பிரபலமாகி  இசையமைப்பாளராக சினிமாவுக்குள் எண்ட்ரி ஆனவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் 2017ம் ஆண்டு மீசைய முறுக்கு என்கிற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். அதன் பின் வந்த அனைத்து ஆண்டுகளிலும் இவரது படம் வெளியாகி வருகிறது. சிவக்குமாரின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள இவருக்கென ஒரு ரசிகப்பரப்பு இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இவரது நடிப்பில் பி.டி சார் என்கிற திரைப்படம் வெளியாகியிருந்த நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் ‘கடைசி உலகப் போர்’ என்கிற திரைப்படம் வெளியானது. 

இவரது 8வது திரைப்படமான கடைசி உலகப்போரை ‘ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட்’ என்கிற பெயரில் இவரே தயாரித்தார். மேலும் இத்திரைப்படத்தை இவரே இயக்கி நடிக்கவும் செய்தார். இப்படத்தின் முன்னோட்டம், போஸ்டர் முதல் கிளிம்ப்ஸ் விடியோ வரை அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இத்திரைப்படம் இம்மாதம் 20ம் தேதி திரைக்கு வந்த நிலையில் ஓரளவு நல்ல வரவேற்பு இப்படத்துக்குக் கிடைத்தது. இத்திரைப்படத்தைப் பார்த்த பலரும் இதன் இரண்டாம் பாகம் வருமா என்று கேட்டிருந்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் விரைவில் வரவிருக்கிறது என்பதை உறுதி செய்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. 

நேர்காணல் ஒன்றில் ஹிப்ஹாப் ஆதி பேசுகையில், “கடைசி உலகப்போர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை 100 சதவிகிதம் எழுதி முடிக்கப்பட்டு விட்டது. படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டோம். சில காட்சிகளை படமாக்கியும் விட்டோம். இந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தை பெரிய பட்ஜெட்டில் இருக்கும். கடைசி உலகப்போர் திரைப்படத்தின் முதல் பாதியில் கதையை விளக்கிக் கூற வேண்டியிருந்தது. இரண்டாம் பாதியின் கடைசி 30 நிமிடங்களில் உள்ள பரபரப்பில் இருந்தே அடுத்தபாகம் தொடங்குகிறது.” என்று கூறியுள்ள அவர் இந்த இரண்டாம் பாகம் ஏஐ என்று சொல்லப்படுகிற செயற்கை நுண்ணறிவுக்கும் மனிதனுக்கும் இடையில் நடக்கும் கதையாக இருக்கும் என்றும் முதல் பாகத்தை விட படத்தின் நேரம் குறைவாக இருக்கும் என்றும் அவர் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version