Home அரசியல் நேர்காணல்-இனி அ.தி.மு.க.வின் ஜென்ம எதிரி விஜய்! – Kumudam

நேர்காணல்-இனி அ.தி.மு.க.வின் ஜென்ம எதிரி விஜய்! – Kumudam

0


விஜய் முதல்வராவதைத் தடுக்க தி.மு.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்க முயன்றதாக பலரும் சொல்கிறார்கள். உண்மையில் என்ன நடந்தது?

“தேர்தலில் ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி வந்துவிட்டால் வதந்திகளுக்கும், புரளிகளுக்கும் இடமிருக்காது. மெஜாரிட்டி இல்லாதபோது இப்படியெல்லாம் பேசப்படும். அப்படி நடந்திருக்குமோ, இப்படி நடந்திருக்குமோ என ஹேஸ்யங்கள் வெளியாகும். த.வெ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்திருந்தால் இப்படியான ஹேஸ்யங்கள் 2006 தி.மு.க.வுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், கூட்டணி பலமாக இருந்தது. த.வெ.க.வின் நிலைமை அப்படி இல்லாததால், இப்படியொரு கட்டுக்கதை வெளியானது.

“தனிநபரைவிட வத்திருக்கா அற கட்சிதான் பெரிது அ.தி.மு.க.வுடன் த.வெ.கவை ஒப்பிடுகிறார்களே?

“தி.மு.க. நிறுவனர் அண்ணாவின் இதயக்கனியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். பிறகு கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்தார். கருணாநிதி முதல்வராக எம்.ஜி. ஆர். தான் காரணம். விஜய்யைப்போல் கட்சி துவங்கி இரண்டு வருடங்களுக்குள் எந்த சூழலிலும் திட்டமிடவில்லை. அ.தி.மு.க. என்ற இயக்கம் அதிகாரத்துக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் எம்.ஜி.ஆர். அல்ல. அது ஏழை, எளிய மக்களுக்காக சுயம்புவாக வந்த இயக்கம். த.வெ.க.வுடன் அ.தி.மு.கவை ஒப்பிடுவதே தவறு.

‘தூர்ந்துபோன சக்தி’ என அ.தி.மு.க.வை விஜய் விமர்சித்திருக்கிறாரே?

“மிக கேவலமான அரசியல் முன்நகர்வு அதி.மு.க.வின் அடிச்சுவட்டைப் பற்றி தெரியாதவர் விஜய். அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி திட்டங்கள்,தொலைநோக்கு திட்டங்கள் பற்றிய வரலாறு தெரியாதவர் விஜய் நீண்டநெடிய காலம் அரசியல் அல்லது மக்கள் சேவை என ஏதாவது ஒன்றில் விஜய் பயணித்திருந்தால் அ.தி.மு.க.வை பற்றி அவர் தெரிந்து வைத்திருப்பார். அதி.மு.க.வின் வரலாறும், தியாகமும் தெரியாததால் அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் விஜய். இன்றைக்கு காற்று அவர் பக்கம் வீசுகிறது. இதனால் தலைகால் புரியாமல் விமர்சனம் செய்கிறார். இது அவரது தகுதியைத்தான் வெளிப்படுத்துமே தவிர, அ.தி.மு.க.வின் தகுதியைக் குறைக்காது.”

பிற கட்சிகளுக்கு தாவும் அதிமு.க.வினர் தங்கள் சொத்தை அதி.மு.க.வுக்கு எழுதி வைக்கவேண்டும்’ என குரல் கொடுத்திருக்கிறீர்களே?

“அ.தி.மு.க.வின் துவக்க காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாக பலர் கட்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறிய அரசு பதவிகூட கிடைக்காமல் இன்னமும் பணி செய்துகொண்டிருக்கும் அவர்கள் யாரும் கட்சி மாறி செல்லவில்லை. ஆனால், கட்சியை வைத்து பதவி உட்பட எல்லாம் அனுபவித்தவர்கள் மனவருத்தத்தில் செல்வதாக சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த கட்சி மூலம் ஒரு ரூபாய் சம்பாதித்திருந்தால்கூட அதையும் கட்சிக்கே எழுதி வைத்தால் நல்லது என சொல்கிறேன்.”

பல வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை அமைந்திருக்கிறதே?

“ஒரு சென்சிட்டிவான விவகாரத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வி.சி.க.வின் வன்னி அரசு ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார். ஐ.எம்.யூ.எல். ஷாஜகான் ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார். இதில் கொள்கை உடன்பாடு ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்தாலும்கூட ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது அல்லவா? கொள்கைகளை விட்டுக்கொடுத்துவிட்டு அதிகாரத்துக்காக சமரசமாகப்போவார்கள் என்றால் அவர்களுக்கு தனித்தனி கட்சியே தேவை இல்லை. கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறதே த.வெ.க. அரசு?

“தமிழகத்தின் கடன் சுமை, நிதி நிலவரம் இவற்றை எல்லாம் தெரிந்துகொண்டுதான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதாக சொன்னார் விஜய். ஆனால், இப்போது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? வெள்ளைபல வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை அமைந்திருக்கிறதே?
“ஒரு சென்சிட்டிவான விவகாரத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வி.சி.க.வின் வன்னி அரசு ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார். ஐ.எம்.யூ.எல். ஷாஜகான் ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார். இதில் கொள்கை உடன்பாடு ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்தாலும்கூட ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது அல்லவா? கொள்கைகளை விட்டுக்கொடுத்துவிட்டு அதிகாரத்துக்காக சமரசமாகப்போவார்கள் என்றால் அவர்களுக்கு தனித்தனி கட்சியே தேவை இல்லை. கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.”

வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறதே த.வெ.க. அரசு?

“தமிழகத்தின் கடன் சுமை, நிதி நிலவரம் இவற்றை எல்லாம் தெரிந்துகொண்டுதான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதாக சொன்னார் விஜய். ஆனால், இப்போது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? வெள்ளைஅறிக்கை வெளியிட்டதின் மூலம் மக்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்ற சந்தேகம் வலுக்கிறது. உதாரணமாக, பயிர்க்கடன் தள்ளுபடியை சொல்லலாம். இது ஜனநாயக கேலிக்கூத்து.”
அண்ணாமலையின் புதிய இயக்கம் குறித்து…

அவருக்கு எனது வாழ்த்துகள். இது ஜனநாயக நாடு. ஜனநாயகத்தில் புது இயக்கம் துவங்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது. விஜய் கட்சி துவங்கிய பிறகு, நிறைய பேருக்கு கட்சி துவங்கும் ஆசை வந்திருக்கிறது. அதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.”
இவ்வளவு பிரச்னைகள், பிளவுகளுக்குப் பிறகு, அ.தி.மு.க.வின் எதிர்காலம் என்னவாகும்?

“தனிநபரைக் காட்டிலும் கட்சிதான் பெரிது. பா.ஜ.க.வை எடுத்துக்கொள்ளுங்கள். கல்யாண் சிங், உமாபாரதி, யஷ்வந்த் சின்கா என எத்தனையோ பேர் பிரிந்து சென்றுவிட்டார்கள். ஆனால், அந்தக் கட்சி இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது. அதேபோல் தி.மு.க.வில் இருந்தும் எத்தனையோ பேர் வெளியேறினார்கள். ஆனால், தி.மு.க.வும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. எல்லா கட்சிகளில் இருந்தும் ஆளுமைகள் வெளியேறுவதால் கட்சிக்கு எந்த சேதாரமும் ஏற்படாது. தனிநபரைவிட கட்சிதான் பெரிது என்பதை காலம் உணர்த்தும்.”

அ.தி.மு.க.வை கபளீகரம் செய்யப் பார்க்கிறாரா விஜய்?

‘விஜய் த.வெ.க.வை வளர்ப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. 35 சதவிகித மக்கள் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதைப்பார்த்து நாங்கள் பொறாமைப்படவில்லை. ஆனால், அ.தி.மு.க.வை அவர் சின்னாபின்னமாக்க நினக்கிறார். இதனால் அ.தி.மு.க.வின் ஜென்ம எதிரியாக மாறியிருக்கிறார் விஜய். இப்போது வேண்டுமானால் விஜய் எங்களை கையாலாகாதவர்கள் என நினைக்கலாம். ஆனால், காலம் இப்படியே போய்விடாது. வாழ்க்கை என்பது வட்டம்.”



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version