back to top
26.4 C
London
Tuesday, June 23, 2026
No menu items!
Homeசினிமாகுமுதம் விமர்சனக் குழு-நூறு சாமி - Kumudam

குமுதம் விமர்சனக் குழு-நூறு சாமி – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


இளம் வயதில் விதவையாகி, தன் இரு குழந்தைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்து, அவர்கள் படித்து வேலைக்குச் சென்றபின், அந்த இரண்டு மகன்களும் அம்மாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து திருமணம் செய்து வைப்பதுதான் கதை இது ஒரு நிஜ சம்பவமும் கூட சுலாசாரத்தின் பெயரில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அழுத்தமாக, உயிர்ப்புடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சசி சுவாசிகா நடிப்பு ராட்சசி, தன் குழந்தைகளைப் பிரிய முடியாமல் தவிப்பது. தன் உடம்பைக் கூறுபோட நினைக்கும் மொத்த ஊரையும் அமைதியாகவும், ஆக்ரோஷமாகவும் எதிர்கொள்வது. தன்னை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்யும் காட்சியில், மரண பயத்துடன் மனதின் ஆதங்கம்.

வெறுமை, கோபம், விரக்தி எ அனைத்தையும் கண்களாலேயே வெளிப்படுத்துவது விருதை உறுதி செய்துவிட்டது. அஜய் திஷான், சக்தி இருவரும் இயல்பாக நடித்திருக்கின்றனர். விஜய் ஆண்டனி சில நிமிடங்களே வந்தாலும் சிறப்பு. கருணாஸ். பாலாஜி சக்திவேல் மண்ணின் மைந்தர்கள் காவ்யா அனில், பாதினி குமார் அழகு துறுதுறு பகவதி பெருமாள் வினோதினி காமெடி கலாட்டா. ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் அருமை.

ஆரம்பத்தில் அம்மாவின் வாழ்க்கைப் போராட்டங்களோடு அவளின் மென்மையான உணர்வு களையும் அங்கங்கே வெளிப்படுத்தி. அத்துடன் பிள்ளைகளின் ரியாக்ஷ னையும் காட்டியிருந்தால் திரைக் கதையில் சுவாரஸ்யம் இருத் திருக்கும். க்ளைமாக்ஸில் ஊரே கூடி எதிர்ப்பது, விவாதிப்பது எல்லாம் ஓவர் டிராமா! வயது எதுவானாலும் மறுமணம் தவறல்ல என்ற கருத்து சரிதான். ஆனால், அதுமட்டுமே தீர்வு, பாதுகாப்பு என்பது ஒருவித பழமைவாதம் தான்!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here