Home அரசியல் சட்டசபையில் சலசலப்பு, அதிமுக அமளி, எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு  – Kumudam

சட்டசபையில் சலசலப்பு, அதிமுக அமளி, எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு  – Kumudam

0


2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடியது. அவையில் முதல் நிகழ்வாக முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசினார். இதன் பின்னர் திருவள்ளூர் பெரியபாளையத்தில் தனியார் ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்பாக 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை பர்வோஸ் பேசினார். 

அப்போது குறுக்கிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பு வழங்கமாறு தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் அமைச்சர் பேசியதற்கு பிறகு வாய்ப்பு தருவதாக சபாநாயகர் தெரிவித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்து அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சபாநாயகர் பல முறை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அது பலனிளிக்கவில்லை. 

தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனார். அப்போது அமளியில்  ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்கள் வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version