back to top
26.4 C
London
Tuesday, June 23, 2026
No menu items!
Homeதமிழ்நாடுஅம்மோனியா வாயு கசிவு உயிரிழப்பு 7  ஆக உயர்ந்துள்ளது. மேலும் 74 பேர் கவலைக்கிடம்... -...

அம்மோனியா வாயு கசிவு உயிரிழப்பு 7  ஆக உயர்ந்துள்ளது. மேலும் 74 பேர் கவலைக்கிடம்… – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்படும் தனியாருக்குச் சொந்தமான கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் அசாம் ஒடிசா,மற்றும் ஜார்கண்ட் போன்ற வட மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இரவு பகல் என இரண்டு ஷிப்ட்களில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜுன் 21 தொழிலாளர்கள் ஆழமான உறக்கத்தில் இருந்தபோது ஆலையின் குளிரூட்டும் பிரிவில் பயன்படுத்தப்படும் அம்மோனியா நச்சு வாயு திடீரென கசியத் தொடங்கியது.

இந்த வாயுவை சுவாசித்த சுமார் 40 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர்.அமோனியா வாயு நேரடியாக உடலுக்குள் சென்றதால் நுரையீரல் வீங்கி கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டனர்.

மேலும்,மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.அதே சமயம் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதனால் உயிரிழப்புகள் இன்னும் ஏற்படலாம் என்று அச்சம் ஏற்படுகிறது.மேலும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிலருக்கு சிகிச்சை தீவிரமாக அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் போலீஸார் வாயு கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த  சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here