Home அரசியல் அமோனியா கசிவு விவகாரம், திமுக உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்குக: அமைச்சர் பர்வேஸ் விளக்கம் ...

அமோனியா கசிவு விவகாரம், திமுக உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்குக: அமைச்சர் பர்வேஸ் விளக்கம்  – Kumudam

0


சட்டசபையில் திமுக கெறடா எ.வ.வேலு பேசுகையில்: திமுக தலைவர் சொன்னதைப் போல அமோனியா கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தமிழகத்தில் நடைபெறும் பிரச்னைகளை பேரவைத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். முதலமைச்சர் விஜய்க்கு திமுக உறுப்பினர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்து எனவும் எ.வ.வேலு தெரிவித்தார்.

அம்மோனியா கசிவு தொடர்பாக 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்து பேசுகையில்: இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிந்தது எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. அமோனியா கசிவு காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர். 70 பெண்கள், 4 ஆண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 36 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும் இதில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த வடமாநிலத்தவர்களின் உடல்கள் தமிழக அரசு செலவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கான செலவை அரசே மேற்கொள்ளும். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று பர்வேஸ் கூறியுள்ளார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version