back to top
23 C
London
Saturday, June 20, 2026
No menu items!
Homeஉலகம்லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹார்மூஸ் நீரிணை மீண்டும் மூடிய ஈரான்  - Kumudam

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹார்மூஸ் நீரிணை மீண்டும் மூடிய ஈரான்  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்பட்டதையடுத்து போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தில் இரு தரப்பிலும் மின்னணு முறையில் புதன்கிழமை (ஜூன் 17) இரவு கையொப்பமிடப்பட்டது.இந்த அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியானும் கையொப்பமிட்டனர். இதனைத் தொடர்ந்து, ஈரானின் ஆதரவைப் பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு எதிராக அந்நாட்டின் தெற்கு மாகாணங்களின் மீது வியாழக்கிழமை (ஜூன் 18) இரவு முதல் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

இந்தத் தாக்குதல்களில் 21 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, ஹார்மூஸ் நீரிணை மீண்டும் முடக்கப்படுவதாக ஈரான் ராணுவம் இன்று அறிவித்துள்ளது. உலகளவில் முக்கிய எண்ணெய்வழிப்போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணை வழக்கம்போல் செயல்படாமல் இருந்ததால், ஏற்கெனவே உலகின் பல நாடுகளில் எரிபொருள் உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்தது. இந்த நிலையில், ஒப்பந்தத்துக்குப் பிறகும் தாக்குதல்கள் நடைபெறுவது ஈரான் – அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை பாதிப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஈரான் செய்தி தொடர்பாளர் இதனை மறுத்துள்ளார். அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுதிட்டது போல ஹார்மூஸ் நீரினை திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

ஈரானை தேற்கடித்து விட்டோம்: டிரம்ப் 

ஈரான் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை பாராட்டி எக்ஸ் தளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார். முந்தைய அதிபர்களின் வெளியுறவுக் கொள்கைகளை கடுமையாக சாடியுள்ளார் டிரம்ப்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here