back to top
24.1 C
London
Saturday, June 20, 2026
No menu items!
Homeஅரசியல்சக்கரபாணியின் சதிராட்டம்… தலைமைக்கு எதிராகவே திரும்பிய உடன்பிறப்புகள்..! - Kumudam

சக்கரபாணியின் சதிராட்டம்… தலைமைக்கு எதிராகவே திரும்பிய உடன்பிறப்புகள்..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தி.மு.க.வின் தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணத்தை அறிய 36 பேர் கொண்ட கள ஆய்வுக்குழுவை மாநிலம் முழுவதும் அனுப்பி வைத்திருந்தார் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின். அந்தக் குழு கிளைச் செயலாளர்கள் தொடங்கி மாஜி அமைச்சர்கள் வரை ஆயிரக்கணக்கான நிர்வாகிகளை சந்தித்து, கேட்டறிந்த கருத்துக்களின் அடிப்படையில் விரிவான அறிக்கையையும் தயாரித்திருக்கிறது. 

அதில், ‘கழகத்தை அடியோடு புரட்டிப்போடும் வகையில் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே கட்சி இனி உருப்படும்’ என்று எரியும் நெருப்பாக எச்சரிக்கை வரிகளை வைத்திருப்பதுதான் கட்சித் தலைமையின் ஹார்ட் பீட்டை எகிறச் செய்யும் அரசியல் அணுகுண்டு!

அப்படி என்னதான் இருக்கிறது அந்த அறிக்கையில்? ‘அமைச்சர்களாக இருந்தவர்களும், கட்சி முக்கிய நிர்வாகிகளும் கொஞ்சம் மனசாட்சியுடன் உழைத்திருந்தால் கூடுதலாக இன்னும் 20 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கலாம். பல அமைச்சர்களும், தலைமை நிர்வாகிகளும் கட்சிக்கும், மக்களுக்கும் துரோகம் செய்துள்ளனர் என திமுக தலைமைக்கு ஒப்படைக்கப்பட்ட அந்த ரிப்போர்ட்டின் ஆரம்ப வரிகளே இப்படி அதிர்ச்சியடையவைக்கின்றன. 

இந்த நிலையில், திண்டுக்கல்லில் திமுக மாஜி அமைச்சர் சக்கரபாணி ஆடிய சதிராட்ட்த்தைக் கேட்டு தலைமையே தலை சுற்றி போயுள்ளதாம். 
 
அதாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் ஐ.பெரியசாமியை அவமானப்படுத்தவே சக்கரபாணிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்ற பேச்சு உள்ளூரில் விசுவாசமிக்க தொண்டர்களின் மனங்களை காயப்படுத்தியிருக்கிறது. திடீர் பணக்காரன்போல திடீர் அமைச்சரான சக்கரபாணி, பொங்கல் சிறப்பு தொகுப்பில் செய்த ஊழல், உணவுப்பொருட்களை வாரிகளில் ஏற்றிச் செல்ல ஒப்பந்தம் வழங்கியதில் குளறுபடி என ஆடிய சதிராட்டம் குறித்தெல்லாம் ஆய்வுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். இவரின் சாதி பார்க்கும் போக்கு, மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த திமுக விசுவாசிகளை தலைமைக்கு எதிராகவே திரும்பவைத்திருக்கிறது.

இவையெல்லாம்போக, அமைச்சர்களின் பினாமிகளின் குடும்பத்தினர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அடாவடியாக நின்றபோது அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட கழகத்தினர் சிலர்மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. உள்ளாட்சி மற்றும் பத்திரப்பதிவு துறையில் ‘ஃபிக்சேஷன்’ முறையில் மிக அதிகளவில் பணம் வசூல் பண்ணியது. ‘பார்ட்டி ஃபண்ட் என்று வழித்துச் சுருட்டியதெல்லாம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை கிளப்பியது.

இப்படி அதிகார திமிர், பேராசைகொண்ட பத்து அமைச்சர்கள் தி.மு.க. தோல்விக்கு முக்கிய காரணங்களாக இருந்தார்கள் என்பதை அவரவருக்கு நெருக்கமான நிர்வாகிகளே தெரிவித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர, கீதாஜீவன், மெய்யநாதன், கயல்விழி, மனோ தங்கராஜ், காந்தி, நாசர் ஆகியோர் அமைச்சர் பதவியை வைத்து வாரிகுவித்தபோதும், கீழ்மட்ட நிர்வாகிகளின் குறைகளைப் போக்க சிறு துரும்பையும் கிள்ளிப்போடவே இல்லை. அவர்களின் நல்லது. கெட்டது நிகழ்வுகளுக்கு உதவவே இல்லை என்கின்றார்கள்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here