back to top
18.3 C
London
Saturday, June 20, 2026
No menu items!
Homeசினிமாவிஜய் 69 படத்தில் பீஸ்ட் நாயகி - மீண்டும் மீண்டுமா!   - Kumudam

விஜய் 69 படத்தில் பீஸ்ட் நாயகி – மீண்டும் மீண்டுமா!   – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் களம் காணவிருக்கும் நிலையில், அவர் இனி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். விஜயின் 69 வது படமே அவரது கடைசித் திரைப்படமாக இருக்கும் என்று சொல்லப்பட்டதால் அத்திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. 

இப்படத்தினை யார் இயக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் பெருகியிருந்த நிலையில், சதுரங்க வேட்டை, தீரன், துணிவு உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார் என்கிற தகவல் வெளியானது. இதனையடுத்து இத்திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அப்டேட்டும் வந்த வண்ணம் உள்ளன. நேற்று இந்தி நடிகர் பாபி தியோல் இத்திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற தகவலை படக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக வெளியிட்ட நிலையில் இன்று இந்தியாவின் முன்னணி நடிகையாகத் திகழும் ‘பூஜா ஹெக்டே’ இத்திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படம் தோல்வியடைந்ததால் அவர் தமிழ் சினிமாவில் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் அவர் இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிப்பு, நடனம், தேவையான அளவு கவர்ச்சி என கச்சிதமாக தனது பங்களிப்பைச் செலுத்திய பூஜா தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மூலம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் ‘ஹலமித்தி ஹபிபோ’ பாடலில் இவரது நடனம் வெகுவாக ரசிக்கப்பட்டது. இந்நிலையில் விஜயின் 69வது படத்தின் நாயகியாக மீண்டும் விஜயுடன் இணைகிறார் பூஜா ஹெக்டே. இந்தத் தகவல் ஏற்கனவே வெளியானாலும் அதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படத்திலும் பூஜா ஹெக்டே தான் நாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்தி, தெலுங்கைப் போலவே அவர் தமிழிலும் அவர் வலம் வரவிருக்கிறார்.   



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here