back to top
23.5 C
London
Thursday, June 18, 2026
No menu items!
Homeசினிமாவிஜய் 69 படத்தில் இணைந்துள்ளார் கௌதம் மேனன் - Kumudam

விஜய் 69 படத்தில் இணைந்துள்ளார் கௌதம் மேனன் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


நடிகர் விஜயின் கடைசிப் படமாகக் கருதப்படும் அவரது 69 வது படத்தை சதுரங்க வேட்டை, தீரன், துணிவு உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார். இதனையடுத்து இத்திரைப்படத்தில் நடிப்பவர்கள் குறித்த அறிவிப்பு தினம் தோறும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்தி நடிகர் பாபி தியோல், முன்னணி இந்திய நடிகை பூஜா ஹெக்டே, மலையாள நடிகை மமிதா பைஜு ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர் என்கிற தகவலை படக்கிழுவினர் வெளியிட்டனர்.   

அவ்வரிசையில் திரைப்பட இயக்குநர் கௌதம் மேனன் இத்திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வமான தகவலை படத்தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டிருக்கிறது. ‘மின்னலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் மேனன். அதன் பிறகு ‘காக்க காக்க’ ‘வேட்டையாடு விளையாடு’ போன்ற அதிகரடியான படங்கள் மூலம் ப்ளாக்பஸ்டர் வெற்றி கண்டார். பின்னர் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ என்கிற மெல்லிய காதல் கதையைப் படமாக்கி மாபெரும் வெற்றி கண்டார். 

ஸ்டைலிஷான இயக்குநரான இவர் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ‘விடுதலை’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் விஜயுடன் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜயுடன் அவரது 69 வது படத்தில் கௌதம் மேனன் நடிக்கவிருக்கிறார்.   



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here