back to top
18.4 C
London
Saturday, August 1, 2026
No menu items!
Homeஉலகம்மிரட்டும் ருத்ரம்! சீனா, பாகிஸ்தானுக்கு இந்தியா செக்...! - Kumudam

மிரட்டும் ருத்ரம்! சீனா, பாகிஸ்தானுக்கு இந்தியா செக்…! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


கடந்த ஜூன் 2 ஓடிசா மாநிலம் சந்திப்பூர் வான் சோதனை மையம் வழக்கத்தைவிட பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அங்கு கன்ட்ரோல் அறையிலுள்ள பட்டனை விஞ் ஞானிகள் அழுத்தவே, ருத்ரம் 2 அதிநவீன ஏவுகணை சீறிப் பாய்ந்தது. அதே வேகத்தில் கீழே இறங்கி நிர்ணயிக்கப்பட்ட டார்கெட்டை கச்சிதமாக அழிக்கவும் செய்தது. அவ்வளவுதான். விஞ்ஞானிகள், விமானப்படை அதிகாரிகள் முகத்தில் அளவில்லா மகிழ்ச்சி. சில விநாடிகளில் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் விஞ்ஞானிகளை போனில் அழைத்து பாராட்டு மழை பொழிந்தனர்.

தொடர்ந்து, அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ருத்ரம் 2 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. இது முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவானது. இது இந்திய ஏவுகணை தயாரிப்பில் மிகப்பெரிய மைல்கல்’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவுதான் சீனா, பாகிஸ்தான் நாடுகளை அதிர வைத்திருக்கிறது.

இதுகுறித்து, டெல்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். கடந்த 2020ம் ஆண்டு நாம் ருத்ரம் 1 ஏவுகணையை உருவாக்கினோம். அதன் தாக்குதல் திறன் 100 கி.மீட்டர் முதல் 200 கி.மீட்டர் வரைதான். ஆனால், இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் ருத்ரம் 2 வின் தாக்குதல் திறன் 300 கி.மீட்டர். இது விண்ணிலிருந்து மண்ணைத் தாக்கும் ஒரு சூப்பர் சானிக் மற்றும் ஹைபர் சானிக் ஏவுகணை. 300 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணையில் 200 கிலோ வெடிபொருளை நிரப்பலாம். இந்த ஏவுகணை ‘சீட்’ நோக்கத்திற்காக அதாவது ப்ரெஷன் ஆஃப் எனிமீஸ் ஏர் டிஃபென்ஸ் ஆபரேஷனுக்காக தயாரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக எதிரி நாட்டின் ரேடார், வான் பாதுகாப்பு மையம் வெளியிடும் கதிரியக்கத்தை மோப்பம் பிடித்து அவற்றை அட்டாக் செய்து அழித்துவிடும்.

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் ஊடுருவி 12 பயங்கரவாத முகாம்களை அழித்தது. அப்போது மூன்று இந்திய விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. நாம் பாகிஸ்தானின் ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு மையங்களை குறி வைக்கவில்லை. ஆனால், இனி ஒரு நிலை வந்தால், இந்திய போர் விமானங்கள் பார்டரை தாண்ட வேண்டாம் இந்திய எல்லையிலிருந்தே ருத்ரம் 2 வை அனுப்பினால் போதும். எதிரியின் கண்களை குருடாக்கும் வண்ணம் ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு மையங்களை அழித்துவிடும்.

வெயில், மழை, பகல், இரவு என எந்த சூழலிலும் ருத்ரம் 2 வை ஏவலாம். எதிரி நாடுகளின் வான் பாதுகாப்பு மையங்களை அழிக்க இதுவரை ரஷ்யாவின் கே.எச்31 ஏவுகணையைத்தான் பயன்படுத்தி வந்தோம். இனி ரஷ்யாவின் தயவு தேவை இல்லை. தற்போது ஏவுகணை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றுவிட்டோம். அமெரிக்காவின் ஏ.ஜி.எம். 88 ஹார்ம் மற்றும் ஏ.ஏ.ஆர்.ஜி.எம். ரஷ்யாவின் கே.எச்31 சீனாவின் ஒய்.ஜெ! இங்கிலாந்தின் அலார்ம் போன்ற அடுத்த தலைமுறை ஏவுகணைகள் வரிசையில் நமது ருத்ரம் 2வும் சேர்ந்திருக்கிறது. இந்த ஏவுகணையை சுகோய் 30, ரஃபேல் ஆகிய போர் விமானங்களிலிருந்து ஏவலாம் என்பதால் ருத்ரம் 2 மூலம் பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு பயங்கர செக் வைத்திருக்கிறது இந்தியா” என்றவர், அதுகுறித்தும் விளக்கினார். “பாகிஸ்தானில் முஷாஃப் மஸ்ரூர், தூர்கான், மினாஸ், ரஃபிகியூ ஃபெய்சல், போலாரி உள்ளிட்ட 21 விமானப்படைத் தளங்கள் உள்ளன. அவற்றில் 13 தளங்களில் இருந்து போர் விமானங்கள் பறக்கும். மீதி 8 தளங்களில் விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். எல்லா போர் விமானத் தளத்தையும் பார்டர் தாண்டாமலேயே கரம் 2 வை ஏவி அழித்துவிடலாம். இதன் மூலம் பாகிஸ்தானின் விமானப்படையே டேக் ஆஃப் ஆகாமல் ஸ்தம்பித்துவிடும்.

இந்திய சீன எல்லையில் உள்ள எல்.ஓ.சி. பக்கம் சீனா 40 விமானப்படைத் தளங்களை அமைத்துள்ளது. கன்ஸ், காரி குன்சா, புரேவி உள்ளிட்ட எல்லாத் தளங்களுமே இந்திய எல்லையிலிருந்து வெறும் 40 கி.மீட்டர் தூரத்தில்தான் இருக்கின்றன. எனவே நமது ரஃபேல் போர் விமானங்கள்கூட எல்லையிலிருந்து 200 கி.மீட்டர் தூரத்தில்தான் பறக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், இனிமேல் அந்த நிலை மாறிவிடும். நமது எல்லைக்குள் அதாவது குஜராத்திலிருந்தே சீன ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தும் திறன் கிடைத்திருக்கிறது என்பதால்தான் சீனா, பாகிஸ்தான் நாடுகள் ருத்ரம் 2வை பார்த்து அதிர்ந்துபோயிருக்கின்றன. எனவே இனி அவர்களும் தங்களது ஸ்டேட்டர்ஜியை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை வந்திருக்கிறது. பிரமோஸ், ஆகாஷ். அஸ்திரா போன்ற உள்நாட்டு ஆயுத தயாரிப்பு வரிசையில் ருத்ரம் 2வும் சேர்ந்திருக்கிறது. வரும் காலங்களில் 550 மீட்டர் தூரம் பாயும் ருத்ரம் 3, 700 கிமீட்டர் தூரம் பாயும் குத்ரம் 4 ஏவுகணைகளும் தயாரிக்கப்பட்டுவிட்டால் எதிரி நாடுகளின் எந்த மூலையையும் தாக்கி அழிக்கும் பலம் இந்தியாவுக்கு வந்துவிடும்’ என்றார்.

அமைதிக்காகத்தானே அத்தனையும்?



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here