back to top
21.3 C
London
Wednesday, September 23, 2026
No menu items!
Homeசினிமாமுதல் பாலே சிக்ஸ்.. சாதனை படைத்த பிக்பாஸ்! - Kumudam

முதல் பாலே சிக்ஸ்.. சாதனை படைத்த பிக்பாஸ்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


Bigg Boss Tamil Season 8  கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே, பல்வேறு புதிய அம்சங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறி வருகின்றன. புதிய தொகுப்பாளர், பெரிய வீடு, மற்றும் அசாத்திய ‘ஆண்கள் Vs பெண்கள்’ கருப்பொருள் என  ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது பிக்பாஸ் சீசன் 8.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அறிமுகமாகியுள்ளார். அவர் அசத்தலான தோரணையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறார். விவாதங்களை நேரடியாக சந்திப்பது, போட்டியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு அதனை நேர்மையாக விசாரிப்பது, உள்ளிட்ட விஜய் சேதுபதியின் தன்னம்பிக்கை மிக்க அணுகுமுறைக்கு ரசிகர்களிடையே பலத்த பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. சனி & ஞாயிறு எபிசோட்களில் விஜய் சேதுபதி என்ன சொல்ல போகிறார்? என்னென்ன சம்பவங்களை செய்யப்போகிறார்? போன்ற எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளதால் வார இறுதி எபிசோட்களுக்காக ரசிகர்கள் Eager ஆக வெயிட் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8 தொடக்க எபிசோடு பல்வேறு சாதனை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழகம் முழுவதும் 9 TVR மற்றும் சென்னையில் 13 TVR  என பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொடக்க எபிசோட் சாதனை  படைத்திருப்பது, நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 

குறிப்பாக, முதல் வாரத்தில் 32 Mn+ பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை பார்த்துள்ளனர். ரசிகர்கள் டிவியில் மட்டுமல்லாமல், டிஜிட்டல் தளங்களின் வாயிலாகவும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியினை கண்டுகளித்து வருகிறார்கள். 4.4 Bn+ நிமிடங்கள் (TV + Digital + Hotstar) நேரம் கொண்டாடப்பட்டுள்ளது. 162 Mn+ பார்வைகள் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here