back to top
16.3 C
London
Monday, June 15, 2026
No menu items!
Homeஅரசியல்மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடு கொந்தளிக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்  -...

மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடு கொந்தளிக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான் திமுக அரசின் இலக்கு.5 ஆண்டுகளில் ஜாதி, மத மோதல்கள் எதுவும் இல்லாமல் தமிழ்நாடு அமைதியாக உள்ளது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது. மெட்ரோ ரயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்துக்கு நிதி தருவதை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

நாட்டிற்கே நல்வழி காட்டும் நல்லாட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து பொருளாதாரத்தை மீட்டெடுத்தது திராவிட மாடல் ஆட்சி. இயற்கை பேரிடர்கள் மட்டுமல்லாமல், ஒன்றிய அரசு உருவாக்கும் செயற்கை நிதி நெருக்கடிகளையும் திமுக அரசு சமாளித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். கொந்தளிப்பு உணர்வு இருக்கும்வரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான். சமூக நீதிக்கு பங்கம் வரும்போது எல்லாம் தமிழ்நாடு உரத்த குரல் கொடுக்கும். வளர்ந்த நாடுகளுடன் தான் தமிழ்நாடு போட்டியிடுகிறது; மற்ற மாநிலங்களோடு அல்ல. தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன்தான் நாம் போட்டி போடுகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு விவசாயி கூட தற்கொலை இல்லை : எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் இடைக்கால வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு சட்டப்பேரவையில் அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலுரை ஆற்றினார். அதில்,*அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் போராட்டத்திற்கு இடையிலேயே வாழ்ந்த உழவர்கள், திராவிட மாடல் ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில்தான் தொடர்ந்து 5 ஆண்டுகளாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.94 லட்சம் கோடி வேளாண்மை துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.விவசாயிகளின் கருத்தை கேட்டு, பட்ஜெட்டில் திட்டங்களை அறிவிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். திராவிட மாடல் ஆட்சியில் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்யவில்லை.

 

உழவர்களுக்கு மதிப்பளிப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனால்தான், இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்கி வருகிறார். உழவர்களுக்கான திட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்

 

5 ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் 2 பாசனத்திற்காக நீர்திறக்கப்பட்டது. வேளாண் துறையில் 682 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 676 திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here