back to top
20.2 C
London
Monday, June 15, 2026
No menu items!
Homeதமிழ்நாடுஉச்சநீதிமன்ற உத்தரவு.. கட்டண வசூலை தொடங்கிய எலியார்பத்தி சுங்கச்சாவடி! - Kumudam

உச்சநீதிமன்ற உத்தரவு.. கட்டண வசூலை தொடங்கிய எலியார்பத்தி சுங்கச்சாவடி! – Kumudam

Date:

Related stories

‘பூங்குழலி’ ஐஸ்வர்ய லக்‌ஷ்மியின் கண்கவர் புகைப்படங்கள் – Kumudam

‘பூங்குழலி’ ஐஸ்வர்ய லக்‌ஷ்மியின் கண்கவர் புகைப்படங்கள் - Kumudam -...

வீடற்ற பெண்ணின் கோரிக்கை: 6 மாதத்தில் தீர்வு கண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த பெண் விடுத்த...

‘Racing girl’ நிவேதா பெத்துராஜின் அழகிய புகைப்படங்கள் – Kumudam

‘Racing girl’ நிவேதா பெத்துராஜின் அழகிய புகைப்படங்கள் - Kumudam...
spot_imgspot_img


மதுரை, தூத்துக்குடி நான்கு வழி சாலையில்சுங்க கட்டணம் வசூலிக்கும் மதுரை எலியார்பத்தி, தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரம் தனியார் சுங்கச்சாவடி நிர்வாகம் சாலை ஓரகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, சாலையின் நடுவே பெரும்பாலான இடங்களில் செடிகள் வைக்கப்படவில்லை. 

சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை எனவே சுங்க கட்டண வசூலுக்கு தடை விதிக்க வேண்டும் என தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் பொது நலமனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என கடந்த மூன்றாம் தேதி இடைக்கால தடை விதித்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது. உச்சநீதிமன்றம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி இன்று உயர் நீதிமன்ற கிளை தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. 

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணியிலிருந்து எலியார் பத்தி சுங்கச்சாவடி நிர்வாகம் உடனடியாக கட்டண வசூலை தொடங்கியது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதித்து. ஆனால், ஆணை கிடைக்கவில்லை கிடைக்கும் வரை சுங்கச்சாவடியை கடந்து சென்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அடுத்த நாள் வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த உடனே சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here