back to top
11.3 C
London
Thursday, September 24, 2026
No menu items!
Homeஉலகம்ஈரான் அமெரிக்கா இடையே போர் நிறுத்த உடன்படிக்கை? ஜூன் 14-ல் ஜெனீவாவில்  ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது...

ஈரான் அமெரிக்கா இடையே போர் நிறுத்த உடன்படிக்கை? ஜூன் 14-ல் ஜெனீவாவில்  ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது – Kumudam

Date:

Related stories

துணை முதல்வர் ஆஃபர்… பேரம் பேசிய ஆதவ்… புட்டுப் புட்டு வைத்த சீமான்! – Kumudam

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும்...

பட்டினப்பாக்கத்துக்கு குட் பை ? அடுத்தடுத்த எதிர்ப்புகள் ! அந்தர்பல்டி அடித்த விஜய் ?

மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து பட்டினப்பாக்கம் புதிய...
spot_imgspot_img


ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் நிறுத்தி வைத்து இருந்தன. ஆனால், தாக்குதலை மீண்டும் துவக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, டிரம்ப்பை வலியுறுத்தி வந்தார். அமெரிக்க விமானத்தை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து மீண்டும் தாக்குதலை துவக்க டிரம்ப் உத்தரவிட்டார். ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றப் போவதாகவும்கூறி வந்தார்.

ஆனால், அமெரிக்காவும் ஈரானும் இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அணு ஆயுதம் வைத்திருக்க வேண்டாம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. ஈரானின் ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி இந்த ஒப்பந்தத்திற்கு தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்துள்ளார் என அறிவித்து, புதிய தாக்குதல்களை நிறுத்தி வைத்தார்.இது தொடர்பாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவது என எடுத்த முடிவு குறித்தும், ஈரான் ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டது என்ற முடிவை டிரம்ப் வெளியிட்டார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, 14 அம்சங்கள் கொண்ட ஒரு வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரான் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், முன்மொழிவுகளை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.ஈரானிய ஊடகங்களின் செய்திகளின்படி, பின்வரும் நிபந்தனைகளை ஈரான் அரசு முன்வைத்துள்ளது.முழுமையான போர் நிறுத்தம்:லெபனான், காசா உட்பட அனைத்து முனைகளிலும் தற்போதைய போரை உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்த வேண்டும்.இறையாண்மைக்கு மதிப்பு:

ஈரானின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது; அதன் இறையாண்மையை மதிக்க வேண்டும்.ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள கடல்வழி வர்த்தக முற்றுகையை 30 நாட்களுக்குள் அமெரிக்கா முழுமையாக நீக்க வேண்டும்.ஈரானின் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும்.

உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி 30 நாட்களுக்குள் மீண்டும் திறக்கப்படும்.ஈரானின் கச்சா எண்ணெய், பெட்ரோகெமிக்கல் பொருட்கள் மீதான பொருளாதாரத் தடைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டு, அதன் வருவாயை ஈரான் முழுமையாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.போரினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய, அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ஈரானின் பொருளாதார மறுசீரமைப்பிற்கு குறைந்தது 300 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க வேண்டும்.

ஈரானின் அணுசக்தி விவகாரம் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தடைகளை முழுமையாக நீக்குவது குறித்து இறுதி முடிவெடுக்க 60 நாட்கள் கால அவகாசத்துடன் கூடிய பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.ஈரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்கீழ் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும்.60 நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெறும் காலத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா கூடுதல் படைகளைக் குவிக்கக் கூடாது; புதிய தடைகளையும் விதிக்கக் கூடாது.$24 பில்லியன் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும்:

அமெரிக்காவால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் 24 பில்லியன் டாலர் நிதியை 60 நாட்களுக்குள் விடுவிக்க வேண்டும். இதில் பாதியை பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே வழங்க வேண்டும்.இந்த ஒப்பந்தத்தின் விதிகள் இரு தரப்பிலும் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு சர்வதேசக் குழு அமைக்கப்படும்.

இறுதி செய்யப்படவுள்ள இந்த உடன்படிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மூலம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்க வேண்டும்.இந்த இறுதி உடன்படிக்கை ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கும்; ஈரானின் ஏவுகணைத் திட்டம் அல்லது அதன் பிராந்திய பாதுகாப்புக் குழுக்கள் பற்றிய விவாதங்கள் இதில் சேர்க்கப்படாது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும், ஞாயிற்றுக்கிழமையே இந்த ஒப்பந்தவிழா நடைபெறலாம் என கூறப்படுகிறது.ஒப்பந்தத்தின் பெரும்பாலான பகுதிகள் இறுதி வடிவம் பெற்றுள்ள போதிலும், ஈரானின் உச்ச தலைவர் மற்றும் உயர்மட்டக் குழுக்களின் இறுதி ஒப்புதலுக்காக வரைவு அறிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் வரவேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here