back to top
20.8 C
London
Monday, June 15, 2026
No menu items!
Homeஅரசியல்நீட் விலக்கு, கோவையில் எய்ம்ஸ், திருக்குறள் தேசிய இலக்கியம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்...

நீட் விலக்கு, கோவையில் எய்ம்ஸ், திருக்குறள் தேசிய இலக்கியம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்  – Kumudam

Date:

Related stories

காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதல்வர் விஜய் அறிவிப்பு 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்...
spot_imgspot_img


நிதி ஆயோக் கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை, திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார். 

தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். அதன்படி முதல்வர் விஜய் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு;-

ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பணியிடைப் பயிற்சிகள் (Internships) மற்றும் தொழில்துறையுடன் இணைந்த திறன் பயிற்சிகளை வழங்கும் “இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கத்தை” (Youth Skill and Employment Mission) செயல்படுத்த விழைகிறேன். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் திறன் மையங்களை அமைப்பதற்கும், செயற்கை நுண்ணறிவு, ஆழ்தொழில்நுட்பம் (Deep Technology), இணையப் பாதுகாப்பு, மேகக் கணினி தொழில்நுட்பம் (Cloud Computing), மின்சார வாகனத் தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி (Semiconductor) தொடர்புடைய துறைகளில் பயிற்சி அளிப்பதற்கும் மத்திய அரசின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம்.

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. ஏனெனில், இந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கிராமப்புற மாணவர்களும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மேற்கண்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் (MBBS), பல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலைப் பட்டம் (BDS) மற்றும் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவப் (AYUSH) படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 “வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்” (Poverty-Free Tamil Nadu Mission) ஒன்றை எங்கள் அரசு முன்மொழிகிறது. மேலும், அனைவருக்கும் வீடு என்ற கனவை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசின் நிதி உதவியையும் அன்புடன் நாடுகிறேன்.உயர்தர மருத்துவச் சிகிச்சையை மேலும் வலுப்படுத்தவும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்வியை வழங்கவும், தரமான மருத்துவ சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைத்திடவும், தமிழ்நாட்டிற்கு இரண்டாவது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையை கோயம்புத்தூரில் அமைக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்குத் தேவையான நிலத்தை மாநில அரசு வழங்கும்.

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்யவும் தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.கடற்கரை நகரங்களில் நிரந்தர வெள்ளத்தடுப்புக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், உயிரிழப்பில்லா பேரிடர் மேலாண்மை இயக்கத்தைச் செயல்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய உட்கட்டமைப்புகளை உள்ளடக்கிய “காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம் 2045” (Climate Resilient Master Plan 2045) கீழ் மத்திய அரசின் மேம்பட்ட ஆதரவையும் தமிழ்நாடு நாடுகிறது.

மேலும், குலசேகரபட்டினத்தில் இந்திய விண்வெளித் துறை (IN-SPACe) உடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள விண்வெளி உற்பத்தி மையத்தை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டும் என இந்திய அரசின் கவனத்தையும் ஆதரவையும் தமிழ்நாடு எதிர்பார்க்கிறது. இதன் மூலம் உந்துபொருள் முதல் ஏவு வாகனங்கள் தயாரிப்பு வரை முழுமையான உற்பத்தித் திறன் உருவாகி, உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றும் வாய்ப்பு ஏற்படும்.

தமிழ்நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் வழித்தடங்களை உரிய நேரத்தில் மேம்படுத்துவது அவசியமாகும். எனவே, பின்வரும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்திடம் நான் கேட்டுக்கொள்கிறேன்:-

ஜி.எஸ்.டி. சாலையின் (NH-32) செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல்.NH-81 திருச்சி (பஞ்சப்பூர்) – ஜீயபுரம் – கரூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக (Six Lane) மேம்படுத்துதல்.NH-81 கரூர் – கோயம்புத்தூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக (Six Lane) மேம்படுத்துதல்.NH-87 மாதவரம் – சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் (Elevated Corridor) அமைத்தல்.சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் (High Speed Rail Corridor) அமைத்தல்.

எண்மிய (Digital) இணைப்பு வசதியைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் பாரத்நெட் இரண்டாம் கட்டத் திட்டம் சுமார் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எனவே, மீதமுள்ள கடைசிக் கட்ட இணைப்பு சவால்களைத் தீர்க்கவும், வலைப்பின்னல் (Network) செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக நிலைநிறுத்தவும், அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் இணைய இணைப்புடன் இணைக்கப்படுவதையும் உறுதி செய்ய இந்திய அரசின் ஆதரவை நான் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஒகேனக்கல் மூன்றாம் கட்டக் கூட்டுக்குடிநீர் வழங்கல் திட்டத்திற்காக (Hogenakkal Phase–III Combined Water Supply Scheme) ரூ.2,283.40 கோடி அளவிலான உறுதியளிக்கப்பட்ட மத்திய நிதி உதவியை வழங்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.நிதிப் பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை நிலைநிறுத்தல் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்கள் உரிய அங்கீகாரத்தையும் போதுமான ஆதரவையும் பெற வேண்டும்; இம்மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.

மாநில அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுக்கும், மத்திய அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத் திட்டத்தின் (கிராமப்புறம்) (VB-G RAM-G) கீழ் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு இவ்வாய்ப்பின் மூலம் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாணவர்களின் நலன், கல்விச் சேவைகளின் தொடர்ச்சி மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ‘ஒருங்கிணைந்த கல்வி’ (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை, எவ்வித நிபந்தனைகளுமின்றியும், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தவோ அல்லது மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவோ வற்புறுத்தாமலும் விரைவாக விடுவிக்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களுக்கு தனித்துவமாக விளங்கும் தொன்மையான நூலான திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்குமாறு இந்திய அரசிடம் இம்மன்றத்தின் முன் கோரிக்கை விடுக்க விழைகிறேன்.

மாநிலங்கள் வலுப்பெறும்போது, ​​இந்தியாவும் வலிமை பெறுகிறது என்று தமிழ்நாடு உறுதியாக நம்புகிறது. கூட்டாண்மை, ஒருவருக்கொருவர் மதித்தல் மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றின் வாயிலாக, நாம் அனைவரும் இணைந்து ஒரு வளமான, சமத்துவமிக்க, புதுமையான மற்றும் நிலையான இந்தியாவை உருவாக்க முடியும். தமிழ்நாட்டு மக்களின் விருப்பங்களை எடுத்துரைப்பதற்கான இந்த வாய்ப்பை வழங்கியமைக்காக, பிரதமருக்கும், அவையோர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் பேசினார். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here