Home சினிமா ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் வந்த சிவகார்த்திகேயன்! பிளர் செய்யப்பட்ட தேசியக் கொடி… ரசிகர்கள் குழப்பம்! –...

‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் வந்த சிவகார்த்திகேயன்! பிளர் செய்யப்பட்ட தேசியக் கொடி… ரசிகர்கள் குழப்பம்! – Kumudam

0


‘பிக் பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியின் 8-வது சீஸன், கடந்த அக்டோபர் 6-ம் தேதி தொடங்கியது. 7 சீஸன்களாக இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனுக்குப் பதில், இந்த சீஸனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆர்ஜே ஆனந்தி, அன்ஷிதா, அருண், தீபக், தர்ஷா குப்தா, ஜாக்குலின், ஜெஃப்ரி, முத்துக்குமரன், பவித்ரா, ரஞ்சித், சாச்சனா, சத்யா, சவுந்தர்யா, சுனிதா, தர்ஷிகா, விஜே விஷால், அர்ணவ், ரவீந்தர் சந்திரசேகர் என மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த சீஸனில் கலந்து கொண்டனர்.

105 நாட்கள், 18 போட்டியாளர்கள் என தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஒரு நாளிலேயே சாச்சனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், சில நாட்கள் கழித்து மறுபடியும் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் வந்த அவர், நிகழ்ச்சியில் தொடர்ந்து வருகிறார். முதல் வாரம் ரவீந்தர் சந்திரசேகர், இரண்டாவது வாரம் அர்ணவ் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என ‘பிக் பாஸ்’ ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். அதன்படி இந்த வாரம் மிகவும் குறைவாக பெர்ஃபாமன்ஸ் செய்யும் தர்ஷா அல்லது சவுந்தர்யா எலிமினேட் ஆனால் நன்றாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாவதை முன்னிட்டு, அந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் அரங்கேறியது. இதில், சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு, போட்டியாளர்களுடன் ‘அமரன்’ படம் பற்றி கலந்துரையாடினார். ‘இந்தப் படத்துக்கும், பிக் பாஸுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு’ என அவர் கூறினார்.

மேலும், ஒவ்வொரு போட்டியாளருக்கும் தன் கையாலேயே இந்திய தேசியக்கொடியை சிவகார்த்திகேயன் கொடுக்க, அனைவரும் கொடியைத் தங்களுடைய நெஞ்சில் அணிந்துகொண்டனர். பின்னர், ‘அமரன்’ பெயர் பொறித்த கேக் வெட்டப்பட்டது. ஆனால், இன்று கடைசியாக வெளியான புரமோவில், தேசியக்கொடி blur செய்து மறைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் உட்பட அனைவரது நெஞ்சிலும் உள்ள தேசியக்கொடி வேண்டும் என்றே மறைக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதற்கு பிக் பாஸ் விளக்கம் கொடுப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version