back to top
20.4 C
London
Tuesday, June 16, 2026
No menu items!
Homeதமிழ்நாடுபாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய், ஸ்டாலின் நேரில் அஞ்சலி  - Kumudam

பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய், ஸ்டாலின் நேரில் அஞ்சலி  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



மேலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய நடிகை ராதிகா மற்றும் சுகன்யா உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்து அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர்.

நீலாங்கரையில் பாராதிராஜா இல்லத்திற்கு சென்று முதல்வர் விஜய் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி இருந்தார். இதை தொடர்ந்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம்  திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும்  அடைந்தேன்.கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள். 

தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் :  தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது. பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் – தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்” என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: இயக்குனர் இமயம்  பத்மஶ்ரீ பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.தென் தமிழகத்தின் கிராமத்தில்  இருந்து புறப்பட்டு,  தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்; திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்; தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் திரு. பாரதிராஜா அவர்கள். அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

“என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. பாரதிராஜா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்களும் பாரதிராஜா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here