back to top
16.4 C
London
Tuesday, June 16, 2026
No menu items!
Homeஅரசியல்தவெக எம்எல்ஏக்கள்  மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடக்கிறது  - Kumudam

தவெக எம்எல்ஏக்கள்  மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடக்கிறது  – Kumudam

Date:

Related stories

அதிமுகவில் 2 விக்கெட் அவுட்? தட்டித் தூக்கும் தவெக..?

அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கட்சித் தாவிக் கொண்டிருக்கும் நிலையில், முன்னாள்...

கையெழுத்தான அமைதி ஒப்பந்தம்.. மீண்டும் திறக்கப்படும் ஹார்முஸ்!

பல மாதங்களாக மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த அமெரிக்கா -...
spot_imgspot_img



நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. தனிபெரும் கட்சியாக ஆட்சி முடியாத சூழலில், கம்யூனிஸ்ட்டுக்கள், காங்கிரசு, விசிக ஆகிய கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்று 1 மாதம் ஆகியுள்ளது. இந்த 1 மாதக்காலத்திற்கு பல்வேறு விமர்சனங்களை தவெக அரசு சந்தித்து வருகிறது. 

அனுபவம் இல்லாத அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் பேச்சு, நடவடிக்கைகள் தவெக அரசுக்கு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.  இந்த நிலையில், நாளை தவெக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.  இதில், எம்எல்ஏக்கள் பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மீடியா சந்திப்பை தவிர்ப்பது போன்றவை குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிகிறது. 

அதுமட்டுமின்றி, ஜூன் 22-ம் தேதி முதல்வர் விஜய் பிறந்தநாள் வர உள்ளது. அன்றைய தினம் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பிறந்தநாள் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்களுடன் இணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட உள்ளது. அதே போன்று வரும் 18-ம் தேதி கூடவுள்ள சட்டசபை கூட்டத்தொடர் குறித்தும் எம்எல்ஏக்கள் எப்படி செயல்பட வேண்டும் என இந்த கூட்டத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here