Home சினிமா ”அதெல்லாம் வேண்டாம் மா…”- ரசிகைக்கு கட்டளையிட்ட SK… காரணம் என்ன? – Kumudam

”அதெல்லாம் வேண்டாம் மா…”- ரசிகைக்கு கட்டளையிட்ட SK… காரணம் என்ன? – Kumudam

0



சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தை, கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. 

வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகியுள்ளது இந்த திரைப்படம் குறித்து சிவகார்த்திகேயன், “பெருங்காதலும் ஒப்பில்லா வீரமும் தியாகமும் நிறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை பயணத்தை திரையில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்” என பதிவிட்டு இருந்தார். 

நேற்றிரவு இந்தப் படத்தை பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் படம் நன்றாக உள்ளதாக பாராட்டி இருந்தனர். 

இந்த நிலையில், இன்று வெளியான அமரன் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக சத்யம் திரையரங்கிற்குச் சென்றார் சிவகார்த்திகேயன். அப்போது ரசிகர்கள் அவருடன் செஃல்பி எடுத்து மகிழ்ந்தனர். அமரன் படம் முடிந்ததும் தியேட்டரை விட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், அமரன் படம் பார்த்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ரொம்பவே நெகிழ்ச்சியானதாகவும், மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்துக்கு நியாயம் சேர்த்திருப்போம் என நம்புவதாகவும் கூறினார்.

அப்போது ரசிகை ஒருவர் சிவகார்த்திகேயனை பார்த்து ‘சின்ன தளபதி சிவகார்த்திகேயன்’ என தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தார். இதனால் பதற்றமான சிவகார்த்திகேயன், ரசிகையிடம் “அதெல்லாம் வேண்டாம் மா” என்பதாக ரியாக்ஷன் கொடுக்க, அதன்பின்னரே அவர் அமைதியானார். 

முன்னதாக கோவையில் நடைபெற்ற அமரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், இனிமேல் விஜய் இடத்தில் நீங்கள் தான் என சிவகார்த்திகேயனை பார்த்து ரசிகர்கள் குரல் எழுப்பினர். அப்போதும் சிவகார்த்திகேயன் பதறிப்போய் “அப்படியெல்லாம் சொல்ல வேண்டாம்” என அன்புக் கட்டளையிட்டார். 

விஜய்யின் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கேரக்டரில் நடித்தது முதலே, அவரை ரசிகர்கள் சின்ன தளபதி, அடுத்த தளபதி என கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. அதோடு, கோட் படத்தில் ஆரம்பித்த இந்த துப்பாக்கி பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version