Home சினிமா  Bigg Boss 8: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள்- புதிய திருப்பம்...

 Bigg Boss 8: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள்- புதிய திருப்பம் – Kumudam

0



நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் 6 புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் 8 ஆரம்பித்து ஒரு மாதம் முடிய உள்ள நிலையில், 6 புதிய வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வருகை மேலும் சுவாரஸ்யமாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சீசனில்  வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா தான் டைட்டிலை வென்று அசத்தினார். எனவே அவர்களின் வரவு புதிய சவால்களை மற்றும் போட்டிகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.கடந்த ஒரு மாத நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, அர்ணவ் ஆகிய 3 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் 4வது வாரமாக நோ எலிமினேஷன் அன அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விஜய் சேதுபதி.

இந்த நிலையில், தீபாவளி போனஸாக 6 புதிய வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி. அதன்படி ராணவ், ரயான், ஷிவகுமார், மஞ்சரி, ரியா, வர்ஷினி ஆகிய 6 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இதன்மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் மொத்தம் 21 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் புதுப் போட்டியாளர்களை இண்டர்வியூ எடுத்து அவர்களில் 4 பேர் மட்டுமே உள்ளே படுக்க அனுமதி அளிக்கப்பட்டது. எஞ்சியுள்ள ராணவ் மற்றும் வர்ஷினி ஆகிய இருவரும் வராண்டா ஏரியாவில் தூங்க வைக்கப்பட்டனர்.

மேலும் வைல்டு கார்டு போட்டியாளர்களின் வருகையால் பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேட் போட்டியாளர்களின் பெயர்களும் வெளியாகி உள்ளது.அதனபடி, மொத்தம் 11 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். அதில் வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு முதல் வாரம் என்பதால் யாரும் நாமினேட் செய்யப்படவில்லை. மேலும் சாச்சனா, முத்துக்குமரன், அருண், ரஞ்சித், தீபக், ஜாக்குலின், சுனிதா, அன்ஷிதா, விஜே விஷால், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். 

கடந்த வாரம் எவிக்‌ஷன் இல்லை  என்பதால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் இந்த  வார பிக்பாஸ் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version