Home அரசியல் முழுசாக மாறப்போகும் அறிவாலயம்: திமுக மாவட்ட செயலாளர் எண்ணிக்கை 100 ஆக உயர்கிறது ? – Kumudam

முழுசாக மாறப்போகும் அறிவாலயம்: திமுக மாவட்ட செயலாளர் எண்ணிக்கை 100 ஆக உயர்கிறது ? – Kumudam

0



நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பறிகொடுத்தது. சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் நேரடியாகத் தொகுதிகளுக்குச் சென்று நிர்வாகிகளிடம் கருத்துக்களைக் கேட்டு, அறிக்கை தயாரித்து வருகின்றனர். இதில் திமுக தனித்து போட்டியிட வேண்டும், கட்சியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் பரிந்துரை செய்துள்ளது. 

இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் கட்சி பல மாற்றங்களை கொண்டு வர ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். சீனியர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு இளைஞர்களுக்கு கட்சி அதிக வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து துரைமுருகனை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து மீண்டும் திமுகவிற்கு புத்துயிர் கொடுக்கும் பணியில் ஸ்டாலின் ஈடுபட்டு உள்ளார். 

திமுக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 78ல் இருந்து 100ஆக உயர்த்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. புதிய மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு நீண்டநாளாக கட்சிக்கு உழைப்பவர்களுக்கு முன்னுரிமை தர திட்டமிடப்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு தலா 2 முதல் 4 தொகுதிகள் வரை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. திமுக பவர் சென்டராக இருந்த சேகர்பாபு போன்ற பல மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version