Home அரசியல் டெல்லியில் அறிவாலயம் தொடங்கிய  அட்டாக்: ராகுல் காங்கிரசை விமர்சனம் செய்து திமுக பேனர் – Kumudam

டெல்லியில் அறிவாலயம் தொடங்கிய  அட்டாக்: ராகுல் காங்கிரசை விமர்சனம் செய்து திமுக பேனர் – Kumudam

0



நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த பேரவைத் தேர்தல்களில் சில முக்கிய கூட்டணிக் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. இந்தச் சரிவுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையே நிலவும் மனக்கசப்புகளுக்கு மத்தியில் இந்த கூட்டம் கூடுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறியதைக் கடுமையாக விமர்சித்த திமுக, இன்றைய கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது.

கூட்டம் ஒருபுறம் நடக்க, டெல்லியில் ராகுல் காந்தியை விமர்சித்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பேனர்களில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின், மம்தா பானர்ஜி மற்றும் சரத் பவார் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. “20 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் முதுகில் அமர்ந்து முன்னேறிய காங்கிரஸ், பிறகு எங்களையே முதுகில் குத்திவிட்டது” என்ற வாசகங்கள் அந்தப் பேனர்களில் அச்சிடப்பட்டுள்ளன. 

காங்கிரசுக்கு எதிரான பேனர்களால் டெல்லியில் சற்று பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசு மற்றும் ராகுல்காந்தியை விமர்சனம் செய்து திமுக வைத்துள்ள பேனர்கள் இருகட்சிகளுக்கும் இடையே மோதலை மேலும் பெரிதாக்கி உள்ளது.  கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான இந்தத் தொடர் மோதல்கள் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version