back to top
14.1 C
London
Saturday, June 6, 2026
No menu items!
Homeதமிழ்நாடுதலைகாட்ட முடியாமல் தவிக்கும் அதிமுக மாஜி? தவெகவில் ஐக்கியமாக முடிவு? - Kumudam

தலைகாட்ட முடியாமல் தவிக்கும் அதிமுக மாஜி? தவெகவில் ஐக்கியமாக முடிவு? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத முடிவாகவே அமைந்தது. குறிப்பாக, திமுக Vs அதிமுக  கான்சப்டையே அடித்து துவம்சம் செய்தது தவெக. அதாவது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் யாருமே அசைக்க முடியாத சக்திகளாக இருந்த இருபெரும் திராவிடக் கட்சிகளையும் ஒரே அணியில் அமரவைத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார் விஜய்.

கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி, திமுக அமைச்சரவையில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் தோல்வி, கோட்டையான சென்னையை இழந்தது என அடிக்கு மேல் அடி வாங்கியது திமுக. இருந்து ஏதோ சமாளித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டது. ஆனால், மறுபக்கம் அதிமுகவோ எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்ததோடு, கட்சி இரண்டாகப் பிளவுப்பட்டு, மீண்டும் கஷ்டப்பட்டு ஒன்றாகியுள்ளது. ஆனால் எடப்பாடியார் தலைமை மீது அதிருப்தியில் இருப்பவர்கள் தொடர்ந்து கட்சியில் நீடித்தாலும், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டுள்ள மாஜிக்கள் சிலர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகும் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே விஜயபாஸ்கர், சிவி சண்முகம் போன்றோர் இந்த முடிவில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது ஜெயக்குமாரும் தவெகவில் இணைய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, 2021 மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட படுதோல்விகளால் நொந்து போயிருக்கிறார் அ.தி.மு.க. மாஜி அமைச்சர் ஜெயக்குமார். உட்கட்சி மோதல்களும் அவரை சோகத்தில் ஆழ்த்திவிட்டன. இதனால், அவரும் வெளியே தலைகாட்டுவதில்லை. அவரை போலவே அவரின் மகன் ஜெயவர்தனும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், த.வெ.க.வில் இணைந்துவிடலாமா என்று யோசிக்கிறாராம்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here