back to top
13 C
London
Saturday, June 6, 2026
No menu items!
Homeதமிழ்நாடுலீவு எல்லாம் ஓவர், நாளை முதல் ஸ்கூல் ஓபன்: வகுப்புகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் ...

லீவு எல்லாம் ஓவர், நாளை முதல் ஸ்கூல் ஓபன்: வகுப்புகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் கடந்த 1 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெப்பம், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியில் பரிசீலனை செய்யுமாறு ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் கொண்டு வந்தது பள்ளிக்கல்வித்துறை. அதன்படி, பள்ளிகள் வியாழக்கிழமை (ஜூன் 4) திறக்கப்பட உள்ளன. 

இதையடுத்து நாளை அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறை, சத்துணவு தயாரிக்கும் சமையல் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை ஆகிய இடங்களில் துாய்மைப்படுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன்படி நேற்று முதல் பள்ளி வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் தொட்டிகள், வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.

கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலை உணவு திட்டம் தொடரும் என்று தவெக அரசு தெரிவித்து இருந்தாலும், நாளை முதல் நாள் என்பதால் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற சந்தேகங்கள் பெற்றோர்கள் மத்தியில் எழுகின்றன.இதனால் தனது குழந்தைகளுக்கு அவர்களே உணவு ஏற்பாடும் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. கோடை விடுமுறையை குழந்தைகளுடன் செலவிட வெளியூர் சென்றவர்களும், கடந்த (மே 31 ஆம் தேதி) ஞாயிறு அன்று சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here