Home சினிமா மத்திய அமைச்சரை சந்திந்து வாழ்த்து பெற்ற ‘அமரன்’ படக்குழு.. !  – Kumudam

மத்திய அமைச்சரை சந்திந்து வாழ்த்து பெற்ற ‘அமரன்’ படக்குழு.. !  – Kumudam

0



இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான ‘அமரன்’ திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 

அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி என கூறப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அமரன் திரைப்படம் தமிழ் திரையுலகில், மிகப்பெரிய வசூலை பெற்றுக்கொடுத்துள்ளது. 

அமரன் திரைப்படத்திற்கு, சினிமா பிரபலங்கள் மட்டுமன்றி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என பல அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். 

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமரன் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்,  நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் R. மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட அமரன் படக் குழுவினரை புது தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அமரன் திரைப்படம் வெற்றியடைந்ததற்கான வாழ்த்துக்களைப் பெற்ற படக்குழுவினர் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  இவர்களுடன் விஸ்வநாத் ராமசுவாமி, நிறுவனர் மற்றும் இயக்குனர், Divo Movies மற்றும் முன்னாள் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த col. சரவண வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.  

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் தேசப்பற்று மற்றும் இந்திய ராணுவம் குறித்து மிகச் சிறப்பாக இந்தப் படத்தை உருவாக்கியதற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

கமல்ஹாசன் தற்போது வெளிநாட்டில் உள்ள நிலையில் இந்தப் படத்தை உருவாக்குவதற்கு இந்திய ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதற்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, அதன் காரணமாக மிகுந்த உண்மைத்தன்மையையுடன் இந்திய ராணுவத்தின் நாயகர்களை வெளிப்படுத்த உதவியதாகவும் கூறியுள்ளார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version