back to top
26.1 C
London
Monday, August 10, 2026
No menu items!
Homeஅரசியல்காங்., தேமுதிகவுக்கு மட்டும் தருவீங்க, எங்களுக்கு தர மாட்டீங்கல கூடுதல் தொகுதி கேட்டு அடம்பிடிக்கும்  மா.கம்யூ ...

காங்., தேமுதிகவுக்கு மட்டும் தருவீங்க, எங்களுக்கு தர மாட்டீங்கல கூடுதல் தொகுதி கேட்டு அடம்பிடிக்கும்  மா.கம்யூ  – Kumudam

Date:

Related stories

“என்னுடைய ஸ்டைல் இதுதான்… கேலி பண்றீங்களா?” – நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்

தமிழக பட்ஜெட் உரையை பிழைகளுடன் உச்சரித்ததாக மதிமுக எம்எல்ஏ கார்த்திகேயன்...

“தினந்தினம் டென்ஷன்ல இருக்கோம்..”: புஸ்ஸி ஆனந்த் –  எம்ஆர்கே இடையே கலகல…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில்,...
spot_imgspot_img



திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் பங்கை உயர்த்தக் கோரி குரல் கொடுத்துள்ளன. சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “காங்கிரஸ், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் தர முடியும் என்றால் எங்களுக்கும் தர வேண்டும்” .

“கடந்த முறையைவிட இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. தொகுதிகளை குறைத்தால் ஏற்பதா என்பது குறித்து எங்கள் தேர்தல் குழு முடிவெடுக்கும்”.  மதவாத சக்திகளுக்கு எதிராக போராடுவதைப் போன்று, மார்க்சிஸ்ட் பலத்திற்கு ஏற்ப தொகுதிகள் பெறுவதும் முக்கியம் என்றும், “எங்களுக்கு அதிக தொகுதிகள் கொடுக்க முடியாது என்று சொல்வதில் நியாயம் இல்லை” என்றார். 

இதே போன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், “திமுகவிடம் 6 தொகுதிகள் கேட்டுள்ளோம். ஆனால் திமுக சார்பில் 5 தொகுதிகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது”. நாளை நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி ஆலோசனை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்னும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நிலையானது ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி கட்சிகளுடன் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் ஏற்படும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here