back to top
32 C
London
Friday, August 14, 2026
No menu items!
Homeசினிமா'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் 5-வது பாடல் வெளியிட்ட கவிப்பேரரசு! - Kumudam

‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் 5-வது பாடல் வெளியிட்ட கவிப்பேரரசு! – Kumudam

Date:

Related stories

அரசு அதிகாரத்தில் பங்கு…..வன்னியரசு-சிந்தனைச்செல்வன் இடையே வெடித்த மோதல்? – Kumudam

அரசு அதிகாரத்தில் பங்கு.....வன்னியரசு-சிந்தனைச்செல்வன் இடையே வெடித்த மோதல்? - Kumudam...

“தவெகவுக்கு ஓட்டுப்போட்டவர்களுக்கு நல்ல சாவே வராது”… மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி! – Kumudam

சென்னை காரம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு புகழ்வணக்கப்...

அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் உள்கட்சி மோதல்? ….. வேலுமணி Vs பொன்னையன்! – Kumudam

அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் உள்கட்சி மோதல்? ..... வேலுமணி Vs...
spot_imgspot_img



வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி வ.கௌதமன் நாயகனாக நடிக்கிறார். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா.

மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படைப்பின் நெருப்பு தகிக்கும் ஐந்தாவது பாடலை இயக்குநர் வ.கௌதமனிடம் தந்ததோடு அப்பாடலைப் பற்றி ஆகப் பெரும் நெகிழ்வோடு தனது எக்ஸ் தளப் பதிவில் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

படையாண்ட மாவீரனாகவே வாழும் வ.கௌதமனுக்கு எதிர் நாயகர்களாக (வில்லன்களாக) மன்சூர் அலிகான், “ஆடுகளம்” நரேன், “பாகுபலி” பிரபாகர், “வேதாளம்” கபீர், மதுசூதனராவ், தீனா என ஆறு பேர் மோதுகின்றனர். பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இப்படைப்பில் மிகவும் உக்கிரமான நான்கு சண்டைக் காட்சிகளை “ஸ்டண்ட்” சில்வா வடிவமைக்க,  நடனக் காட்சிகளை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் காட்சிப் படுத்தியுள்ளார். 

மேலும், இந்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், “ரெடின்” கிங்ஸ்லி, “நிழல்கள்” ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், “தலைவாசல்” விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடிக்கிறார்.  ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைப்பில், பாடல்களை ‘”கவிப்பேரரசு” வைரமுத்து எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவு கோபி ஜெகதீஸ்வரன், வெற்றிவேல் மகேந்திரன், கலை மோகன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, ஸ்டில்ஸ் அன்பு, மக்கள் தொடர்பு நிகில் முருகன் கவனிக்கின்றனர். இத்திரைப்படம் குறித்து, இயக்குநர் வ.கௌதமன் கூறியதாவது,  நேர்மையோடும் அறத்தோடும் படைக்கப்பட்ட “படையாண்ட மாவீரா” மொழி கடந்து, இனம் கடந்து மனித மனங்களை கொள்ளையடிக்கும் என்று கூறியுள்ளார்.  படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து பிறகு இத்திரைப்படம் வெகுவிரைவில், திரைக்கு வரும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 





Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here