Home அரசியல் பெண்கள் குறித்து மாஜிக்களின் சர்ச்சை பேச்சு: தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவிற்கு புது நெருக்கடி  –...

பெண்கள் குறித்து மாஜிக்களின் சர்ச்சை பேச்சு: தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவிற்கு புது நெருக்கடி  – Kumudam

0



தே.ஜ., கூட்டணி சார்பில், விழுப்புரத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், ‘அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதைவிட ஒரு படி மேலே போய், ‘உங்க கனவ சொல்லுங்க’ என்று கேட்கிறார். எனக்கு நடிகை நயன்தாரா வேண்டும். அந்த கனவை நிறைவேற்றுவாரா?’ என்றார். இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. 

இதே போன்று திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “தேர்தலில், தி.மு.க.,வினர் பணத்தை வைத்து வீழ்த்தி விடலாம் என நினைக்கின்றனர்; 100 ரூபாய் மதிப்புள்ள ஹாட் பாக்ஸ், சேலை கொடுத்துள்ளனர். “சேலை கொடுத்துட்டாங்க… பாவாடை இல்லாமல், எப்படி சேலையை கட்டுவது என பெண்களெல்லாம் கேட்கிறார்கள்,” என பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. 

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மகளிர் உரிமைத் தொகை குறித்து அதிமுக எம்.எல்.ஏ அம்மன் கே அர்ஜுனன் பேசும்போது. மூக்குத்தி இருக்கிறதா? கம்மல் இருக்கிறதானு கேட்டது போல விட்டால் புருஷன் இருக்கிறாரா? என கேட்பார்கள் என்று பேசியது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

பிரபல நடிகையான நயன்தாராவின் பெயரைக் குறிப்பிட்டு, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி, காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, பாஜக குஷ்பு  உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாஜிக்களின் இந்த பேச்சு பெண்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. இதனால் தேர்தல் நேரத்தில் அதிமுகவிற்கு இந்த விவகாரம் புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version