back to top
28.5 C
London
Thursday, August 13, 2026
No menu items!
Homeஉலகம்வரலாற்றில் முதல் முறை... மனைவிக்குப் பதில் மகளே முதல் பெண்மணி... பாகிஸ்தான் அதிபரின் அதிரடி முடிவு...

வரலாற்றில் முதல் முறை… மனைவிக்குப் பதில் மகளே முதல் பெண்மணி… பாகிஸ்தான் அதிபரின் அதிரடி முடிவு !! – Kumudam

Date:

Related stories

அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. விலகினார் அப்சரா ரெட்டி.. தவெகவில் இணையப் போகிறாரா?

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில்,...

வைஷாலியை காணோமே..? தேடுதல் வேட்டையில் மின்வாரியம்..!

நடிகை வைஷாலியின் குற்றச்சாட்டுக்கு மின்வாரியம் விளக்கம் அளித்த நிலையில், 200...
spot_imgspot_img



பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி மகள் அசீஃபா பூட்டோ அறிவிக்கப்பட உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சியைப் பிடித்தன. ஷெபாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாகப் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த சூழலில் அந்நாட்டு அதிபராக இருந்த ஆரிஃப் அல்வியின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய அதிபராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் கணவரும், முன்னாள் குடியரசு தலைவருமாக இருந்த ஆசிஃப் அலி ஜர்தாரி பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது மனைவி பெனசீர் பூட்டோ உயிரிழந்த நிலையில், நாட்டின் முதல் பெண்மணி யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், உலக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தனது மகள் அசீஃபா பூட்டோ ஜர்தாரியை முதல் பெண்மணியாக அறிவிக்க உள்ளார், ஆசிப் அலி ஜர்தாரி.  

அசீஃபா பூட்டோ ஜர்தாரி, ஆசிஃப் அலியின் கடைசி மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழங்களில் தனது கல்வியைப் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ம் ஆண்டு அரசியலுக்கு நுழைந்த அவர், தற்போது பாகிஸ்தானின் முதல் பெண்மணியாக அறிவிக்கப்பட உள்ளார். அவருக்கு முதல் பெண்மணிக்கான அனைத்து மரபுகளும், மரியாதைகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here