back to top
32 C
London
Friday, August 14, 2026
No menu items!
Homeதமிழ்நாடுகேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக எல்லையோர மாவட்டங்களில் அலார்ட்  - Kumudam

கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக எல்லையோர மாவட்டங்களில் அலார்ட்  – Kumudam

Date:

Related stories

“தவெகவுக்கு ஓட்டுப்போட்டவர்களுக்கு நல்ல சாவே வராது”… மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி! – Kumudam

சென்னை காரம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு புகழ்வணக்கப்...

அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் உள்கட்சி மோதல்? ….. வேலுமணி Vs பொன்னையன்! – Kumudam

அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் உள்கட்சி மோதல்? ..... வேலுமணி Vs...

“என் மகனுக்கு நீதி வேண்டும்”… உதயநிதியிடம் கதறிய அமுதனின் தாய் !

கோவையில் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அமுதனின்...
spot_imgspot_img



கேரளா மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல கோழிகள் திடீரென உயிரிழந்ததால் அதன் ரத்த மாதிரியை சேகரித்து புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு கால்நடைத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

அதை பரிசோதித்ததில் உயிரிழந்த பறவைகளுக்கு, எச்1, என்1 பறவை காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தியது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்து கிருமி நாசினிகள் தெளிக்க தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் கோவை, நீலகிரி, தேனி , கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ள பொது சுகாதாரத்துறை, சபரிமலை சென்று திரும்பும் பக்தர்கள், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மருத்துவர்களை அணுகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாமக்கல் உள்ளிட்ட கோழி பண்ணைகள் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் கால்நடை மருத்துவர்களோடு இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here