back to top
31.8 C
London
Thursday, June 25, 2026
No menu items!
Homeசினிமாஅருண் பாண்டியன் சார் ஒரு பலாப்பழம்.. அஃகேனம் இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் நேத்தா பேச்சு...

அருண் பாண்டியன் சார் ஒரு பலாப்பழம்.. அஃகேனம் இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் நேத்தா பேச்சு – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன் , கீர்த்தி பாண்டியன்,  சீதா,  ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா , கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். தேவத்யன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ராஜா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதிரடி திரில்லராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை A&P குரூப்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு சரவணன்- ஏகே சேகர் ஆகியோர் இணை தயாரிப்பாளராக உள்ளனர்.

ஜூலை மாதம் 4-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்ற பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசுகையில், ”அஃகேனம் என்ற தமிழ் தலைப்பிற்காக மிக்க மகிழ்ச்சி. இதற்கான காரணத்தை இயக்குநர் விவரிப்பார். இயக்குநர் உதய் என் வீட்டிற்கு வந்து பாடல்களுக்கான சூழல்களை விவரித்தார். இந்த திரைப்படம் அமைதியான மற்றும் ஆழமான உணர்வை பேசக்கூடியது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் வெவ்வேறு வகைமைக்குள்ளான பாடல்களாக இருக்கிறது. மேற்கத்திய இசை -ராக் இசை – இந்திய நாட்டார் இசை – இந்திய செவ்வியல் இசை – என வெவ்வேறு வகையிலான இசை வடிவம்.- இந்தப் படத்தில் பாடல்களாக இடம் பிடித்திருக்கிறது. இசையமைப்பாளர் பரத் வீரராகவன் மிகுந்த திறமைசாலி. இந்த ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற ஆனந்த விகடன் வழங்கும் விருதினை பெற்றிருக்கும் சக பாடலாசிரியர் மோகன் ராஜனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

அருண் பாண்டியன்- பலாப்பழம்:

மேலும் பேசிய கார்த்திக் நேத்தா ”அருண் பாண்டியன் ஐயாவை முதன்முறையாக சந்திக்கும்போது சற்று பதட்டத்துடன் தான் இருந்தேன். அவருடன் தொடர்ந்து பழகும் போது தான் அவர்’ பலாப்பழம் ‘என தெரிந்து கொண்டேன். பழகிய பிறகு இனிக்க இனிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தில் நிறைய பேர் புது முகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இது அரிதினும் அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வு.  இன்றைக்குள்ள காலகட்டத்தில் வியாபாரத்திற்கு யார் பயன்படுவார்களோ அவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், புதிதாக ஒரு குழுவினரை அறிமுகப்படுத்துவதற்கு மிகப்பெரிய துணிவு வேண்டும்.

அறிமுக இசையமைப்பாளர் பரத் வீரராகவனிடமிருந்து இப்படி ஒரு ஓசையை நான் எதிர்பார்க்கவில்லை.  சாலச் சிறந்த பணியை செய்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அறிமுக இயக்குநர் உதய்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள். சக பயணியாக ..சக கலைஞனாக.. இணைந்து பயணிப்போம். நேர்மையுடனும், அறத்துடனும் பயணம் செய்யுங்கள் ” என்றார்.

ஜூலை மாதம் 4 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள அஃகேனம் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here