Home அரசியல் “மதுப்ரியர்களே அலார்ட்டா இருங்க” 31-ம் டாஸ்மாக் கடைகளுக்கு லீவ் – Kumudam

“மதுப்ரியர்களே அலார்ட்டா இருங்க” 31-ம் டாஸ்மாக் கடைகளுக்கு லீவ் – Kumudam

0


தமிழகத்தில் மதுபான விற்பனை டாஸ்மாக் நிர்வாகம் மூலம் அரசே ஏற்று நடத்தி வருகிறது.  தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 4ஆயிரம் மதுபான கடைகள் உள்ளது. அதுமட்டுமின்றி, எலைட் பார்கள் உள்பட தனியார் ஹோட்டல்களிலும் பார்கள் மூலம் மதுபான விற்பனைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 

தமிழகத்தில் நாள்தோறும் கோடிக்கணக்கில் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. விசேஷ நாட்களில் இந்த விற்பனை மூன்று மடங்காக அதிகரிக்கும். முக்கிய விஷேச நாட்களில் மற்ற அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் டாஸ்மாக் கடைகள் அன்றைய தினம் முழுமையாக திறந்து இருக்கும்.அதே நேரம் தமிழகத்தில் குறிப்பிட்ட 8 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிக்கப்படும். 

அந்த வகையில் திருவள்ளூவர் தினம், மிலாது நபி, குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி தினம், மஹாவீர் ஜெயந்தி ஆகிய நாட்களில் விடுமுறையானது விடப்படும். அந்த வகையில் திருவள்ளூவர் தினம், மிலாது நபி, குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி தினம், மஹாவீர் ஜெயந்தி ஆகிய நாட்களில் விடுமுறையானது விடப்படுகிறது. 

அந்த வகையில் வருகிற மார்ச் 31ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே வருகிற செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் எனவும், மீறி கடைகளை திறந்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version