Home அரசியல் அண்ணாமலை ஆதரவாளர்கள் அப்செட்: சீட் பெறுவதில் பாஜகவில் மோதல் உச்சகட்டம் – Kumudam

அண்ணாமலை ஆதரவாளர்கள் அப்செட்: சீட் பெறுவதில் பாஜகவில் மோதல் உச்சகட்டம் – Kumudam

0


அண்ணாமலையை களம் இறக்க வேண்டும் என கோவை பாஜவினர் தீவிரமாக இருந்தனர். ஆனால் பாஜகவிற்கு கணிசமான வாக்கு வங்கியுள்ள கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கவுண்டம் பாளையம் ஆகிய இரு தொகுதிகளை அண்ணாமலை தேர்வு செய்து வைத்திருந்தார். 

இதற்கேற்ப கட்சி சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன் என அவரும் கூறி வந்தார். மேற்கண்ட இரு தொகுதிகளிலும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தார். ஆனால் தொகுதி பங்கீட்டில் கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதால், வானதி சீனிவாசன் மட்டுமே போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இது அவரது ஆதரவாளர்களை அப்செட் ஆக்கி உள்ளது. 

இந்நிலையில்,  அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்செட்டில் இருக்கும்  அண்ணாமலை இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் பாஜக வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதில் தனக்கு தொகுதி ஒதுக்க வேண்டும் என பலரும் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஒரு சில தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யாமல் கூட்டம் முடிந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், வேட்பாளர் யார் என்பதை கட்சியின் உயர்நிலை குழு கமிட்டி கூடி முடிவு செய்வோம். எங்களுடைய வேட்பாளர்களை அகில இந்திய பார்லிமெண்ட் போர்டு குழு முடிவு செய்யும். தேர்தல் அறிக்கை இரண்டு தினங்களில் அறிவிக்கப்படும்” என்றார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version