back to top
20.2 C
London
Thursday, June 25, 2026
No menu items!
Homeஉலகம்இங்கிலாந்து இளவரசிக்கு கேன்சர் !! வெளியான ஷாக்கிங் தகவல்.. - Kumudam

இங்கிலாந்து இளவரசிக்கு கேன்சர் !! வெளியான ஷாக்கிங் தகவல்.. – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


கடந்த ஜனவரி மாதம் முதலே பொதுவெளியில் இளவரசி கேத் மிடில்டன் தோன்றாததால், அவர் காணாமல் போய் விட்டதாக பல செய்திகள் இணையத்தில் வெளியாகியது. பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன். 2011-ம் ஆண்டு இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அரண்மனையில் வசித்து வரும் இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு தான் பிரிட்டன் மன்னர் சார்லஸூக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்து வருவதால், அரசப்பணிகளை இளவரசர் வில்லியம்ஸ் கவனித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த மாதம் இளவரசி கேத் மிடில்டனை காணவில்லை என இங்கிலாந்தில் ஒரு செய்தி பரவியது. இந்தாண்டு தொடக்கத்தில் அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அரண்மனை செய்தி வெளியிட்டிருந்தது. மார்ச் 31-ம் தேதி வரை அரச கடமைகளை அவர் செய்ய மாட்டார், அவருக்கு ஓய்வு தேவை என செய்தி வெளியிடப்பட்டது. பொது வெளியிலும், பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளாததால், அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார் என ஸ்பானிஷ் செய்தியாளர் ஒருவர் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார். 

வயிற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏன் அவர் பொதுவெளியில் வரவில்லை, ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லையே, அப்படியெனில் அவர் காணாமல் போயிருப்பாரோ என லண்டன் மக்கள் சந்தேகம் கிளப்பி வந்தனர். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேத் மிடில்டன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் குடும்ப நலன் கருதி இந்த விவரங்களை வெளியே சொல்லாமல் இருந்தோம். எனக்கு புற்றுநோய் பாதிப்பு என தெரிந்தவுடன் எனக்கும் வில்லியம்ஸுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்தேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு காலம் பிடித்தது. இந்த கீமோ சிகிச்சையை அதே மருத்துவமனையில் தொடங்கியுள்ளேன். எங்கள் குழந்தைகளுக்கும் புரியும் கூறிவிட்டோம்.”

“தற்போது நான் நலமாக இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் மனதளவிலும் உடல் அளவிலும் வலுவாக உள்ளேன்” எனக் கூறியுள்ளார். 42 வயதாகும் கேத் மிடில்டன் அந்த வீடியோவில் உடல் மெலிந்து மிகவும் சோர்வுடன் காணப்படுகிறார். ஆகையால் அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here