Home அரசியல் திருச்சி கிழக்கில் ஏப் 2-ம் தேதி விஜய் மனுத்தாக்கல்: பிரசாரத்தில் அனுமதிக்கோரி தவெக கடிதம்  –...

திருச்சி கிழக்கில் ஏப் 2-ம் தேதி விஜய் மனுத்தாக்கல்: பிரசாரத்தில் அனுமதிக்கோரி தவெக கடிதம்  – Kumudam

0


ஏப்.2 ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள பாலக்கரை மாநகராட்சி அலுவலகத்தில் நண்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய், அதன்பின்னர் அப்பகுதியில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். திருச்சி கிழக்கில் பிரசாரம் செய்ய போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தவெக தரப்பில் திருச்சி காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் மீது வழக்கு தேர்தல் ஆணையம் கேள்வி 

சென்னை கொளத்தூரில் பிரசாரத்தின் போது தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையே கொளத்தூரில் பிரசாரத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என விஜய் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் கேட்டுள்ளார்.

வேட்பாளர்கள் பாதுகாப்பு டிஜிபிக்கு கடிதம் 

விஜய் பிரசாரத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக புகார் அளித்த நிலையில், டிஜிபிக்கு தமிழக தேர்தல் அதிகாரி அரச்சனா பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார். அவர், “பிரசாரத்தில் பாதுகாப்பு தொடர்பான விதிகளை அனைவருக்கும் சமமாக அமல்படுத்த வேண்டும்.

அனைத்து கட்சியின் வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும். விஜய் பிரசாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம்; பிரசாரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் தொடர்பான விபரங்களும் கோரப்பட்டுள்ளன” இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version