Home அரசியல் திமுக வாக்களர்களுக்கு கொடுக்க 60 பெட்டிகளில் இருந்த பொருட்கள்: பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்  –...

திமுக வாக்களர்களுக்கு கொடுக்க 60 பெட்டிகளில் இருந்த பொருட்கள்: பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்  – Kumudam

0


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளது. வேட்புமனு பரிசீலினை முடிந்து அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை கொடுக்க கட்சிகள் தீவிரம் காட்டி வருவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில், மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட வானகரம் செட்டியார் அகரம் சந்திப்பு அருகே டாட்டா ஏஸ் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மடக்கி சோதனையிட்ட போது அதில் திமுக கட்சியின் பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் இருந்துள்ளது.

உரிய ஆவணங்கள் இன்றி ஒரு பாக்ஸில் 100 பிரசுரங்கள் வீதம் மொத்தம் 60 பாக்ஸ்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அனைத்தையும் பறிமுதல் செய்து மதுரவாயில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். பிரச்சாரப் பதாகைகளை மாதவரத்தில் இருந்து சென்னீர் குப்பம் பகுதிக்கு எடுத்துச் செல்வது தெரிய வந்தது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version