Home அரசியல் தமிழக வெற்றிக் கழக பொருளாளர் வெங்கட்ரமணன் மீது அவரது மனைவி கமிஷனர் அலுவலகத்தில் புகார்  –...

தமிழக வெற்றிக் கழக பொருளாளர் வெங்கட்ரமணன் மீது அவரது மனைவி கமிஷனர் அலுவலகத்தில் புகார்  – Kumudam

0


தமிழக வெற்றிக் கழகத்தின் பெருளாளரும்,  மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் வெங்கட்ரமணன். இன்று அவரது மீது மனைவி மீனாட்சி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் தனது தாயார் கல்யாணியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கடந்த 2012ஆம் ஆண்டு வெங்கட்ரமணனுடன் திருமணம் நடைபெற்றது.  அதன் பின்னர் பெண் குழந்தை பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தோம். எனது குழந்தையை தரும்படி அவரிடம் தொடர்ந்து கேட்டு வந்தேன். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. 

வெங்கட்ரமணன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தை நாடிய நிலையில் நீதிமன்றம் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.  இந்நிலையில்  வெங்கட்ரமணன் என்னுடன் வாழாமல், பிறந்த குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். குழந்தையை கூட சந்திக்கவிடாமல் தடுக்கிறார். பம்மல் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். கொலை செய்து விடுதாக மிரட்டுகிறார்.

தன் மகளைப் பார்க்க வேண்டும் என போனில் அழைத்தால் உரிய பதிலளிப்பதில்லை. தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும்  வெங்கட்ரமணன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வெங்கட்ரமணனிடம் இருந்து தனது குழந்தை மீட்டு தர வேண்டும்” என்று மீனாட்சி தெரிவித்துள்ளார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version