Home அரசியல் காரைக்குடி பிரசாரத்திற்கு சென்ற  விஜய் வாகனத்தில் பறக்கும் படை சோதனை  – Kumudam

காரைக்குடி பிரசாரத்திற்கு சென்ற  விஜய் வாகனத்தில் பறக்கும் படை சோதனை  – Kumudam

0


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

தவெக தலைவர் விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இன்று காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை வந்த அவர், அங்கிருந்து தேர்தல் பிரசார வாகனத்தில் காரைக்குடி சென்றார்.

மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் எஸ்.எஸ். கோட்டை அருகே அவரது வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனைக்குப் பிறகு வாகனத்தை விடுவித்ததையடுத்து விஜய், காரைக்குடி நோக்கி புறப்பட்டு சென்றார்.

அண்ணாமலை ஹெலிகாப்டரில் சோதனை 

உதகையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் போஜ ராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலை சென்றுள்ளார். இதனிடையே, அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். 10 நிமிஷங்கள் சோதனை நடந்த நிலையில், அதன்பின்னர் அண்ணாமலை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version